ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டு பிடிக்கவும்,இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரியும் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும்,இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரியும் பகுஜன் ஜமாஜ் கட்சி நெல்லை மாவட்டம் சார்பில் சந்திப்பு ரயில்வே நிலையம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.மாநிலச் செயலாளர் தேவேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் சிவசுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் தனேஷ் செல்வன், மாவட்ட பொதுச் செயலாளர் முருகேசன், மாவட்ட பொருளாளர் சிவராஜ், மாவட்ட துணைத் தலைவர் காசி, தூத்துக்குடி மாவட்ட தலைவர் மாணிக்கராஜ், தென்காசி மாவட்ட தலைவர் மகேஷ் பாண்டியன்,
பாளை சட்டமன்றச் செயலாளர் லாசர், திருநெல்வேலி சட்டமன்ற பொருளாளர் அருணாச்சலம், நாங்குநேரி சட்டமன்ற தலைவர் கோவிந்தராஜ், மானூர் ஒன்றிய செயலாளர் மணி, உட்பட கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.






