தமிழக முதல்வரும் திமுக கழகத் தலைவருமானமு.க.ஸ்டாலின் அவர்களின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சியில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.
திருச்சி பாலக்கரை துரைசாமிபுரத்தில் நாகநாதர் டீக்கடை அருகில் நடைபெற்ற இந்த தெருமுனைக் கூட்டம், 34வது வட்டக் கழகச் செயலாளர் சகாயமேரி சில்வியா மற்றும் 34(அ) வட்டக் கழகச் செயலாளர் கருணாநிதி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
பாலக்கரை பகுதி கழகச் செயலாளர் T.P.S.S. ராஜ் முகம்மது அனைவரையும் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் 34வது வட்டக் கழக நிர்வாகிகள் பிரகாஷ், செல்வேந்திரன், பிரான்சிஸ்கா, சரவணன், காந்தி, பிச்சை, பிரான்சிஸ், ஆரோக்கியராஜ், ரஜினி ராஜா, தன்ராஜ், ரவிச்சந்திரன், ஜான் பிரகாஷ் ஆகியோரும், 34(அ) வட்ட நிர்வாகிகள் மருதமுத்து, சதீஷ் பாபு, விஜயலட்சுமி, திருவேங்கடம், ஆனந்தகுமார், ராதாகிருஷ்ணன், சிவசங்கர், ஆரிப் பாட்ஷா, வடமாலை சீனிவாசன், ஷேக் அப்துல்லா ஆகியோரும் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் Anbil Mahesh Poyyamozhi மற்றும் தலைமை கழக பேச்சாளர் Mannai Ilango கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
மேலும் மாநகர கழகச் செயலாளர் மதிவாணன், திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் Inigo Irudayaraj, தலைமை செயற்குழு உறுப்பினர்கள், மாநிலச் செயலாளர்கள்,

மாவட்ட மற்றும் மாநகர கழக நிர்வாகிகள், பாலக்கரை பகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட அயலக அணி அமைப்பாளர் அடைக்கலராஜா நன்றி கூறினார்.






