அம்பை ஜூலை 14
திருநெல்வேலி மாவட்ட களரிப்பயட்டு அசோசியேஷன் சார்பில் மாவட்ட அளவிலான களரிப்பயட்டு சாம்பியன்ஷிப் – 2026 போட்டி, அம்பாசமுத்திரம் வேல்ஸ் வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.
இப்போட்டியில் திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது களரிப்பயட்டு திறமைகளை வெளிப்படுத்தினர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள், நடைபெறவுள்ள மாநில அளவிலான களரிப்பயட்டு சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர். மேலும் மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகள் கேலோ இந்தியா போட்டிகள் மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பையும் தகுதியையும் பெறுவார்கள்.
இம்மாவட்ட அளவிலான போட்டி திருநெல்வேலி மாவட்ட நிர்வாகி மாஸ்டர் முத்துராமன் ஏற்பாட்டில், களரிப்பயட்டு அசோசியேஷன் ஆஃப் தமிழ்நாடு மாநில இணைச் செயலாளரும் திருநெல்வேலி மாவட்ட செயலாளருமான
ஏ.ஆர். ஆல்வின் ஜெகதீஷ் தலைமையிலும், மூத்த ஆசான்
எல். லட்சுமணன் முன்னிலையிலும் சிறப்பாக நடைபெற்றது.
போட்டியின் வெற்றிக்காக ஒத்துழைப்பு வழங்கிய வேல்ஸ் வித்யாலயா பள்ளி நிர்வாகம், பயிற்சியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் அனைத்து போட்டியாளர்களுக்கும் திருநெல்வேலி மாவட்ட களரிப்பயட்டு அசோசியேஷன் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.






