சேரன்மகாதேவி , ஜூன் 30:
சேரன்மகாதேவி ரயில்வே ஸ்டேஷன் மேல்புறம் பாளை-அம்பை புறவழிச் சாலையில் சுமார் 95 ஆண்டு களுக்கும் மேலாக ரயில்வே கேட் இருந்து வந்தது. இந்த ரயில்வே கேட்டினை கடந்த பிப்.26 அன்று அப்பகுதியில் புதிதாக கட்டப் பட்டரயில்வே மேம்பாலம் திறப்பு விழா நடந்த 2 மணி நேரத்தில் எந்த ஒருமுன்னறி விப்பின்றி ரயில்வே நிர்வா கம் உடனடியாக மூடியது.

இதனால் ரயில்வே கேட் டிற்கு தென்புறம் உள்ள அசோக் நகர்,சத்தியமூர்த்தி நகர், ஜெயா நகர் போன்ற பகுதிகளில் வசிக்கும் ஆயி ரக்கணக்கான குடும்பத்தி னர் கடும் அவதிக்குள்ளா கினர். தென்பகுதி மக்கள் மருத்துவம், கல்வி, பேருந்து உள்ளிட்ட அனைத்து அத் தியாவசிய பணிகளுக்கும் இந்த ரயில்வே கேட்டினை கடந்து சேரன்மகாதேவி ஊருக்குள் வந்து சென்றனர்.

இந்நிலையில் ரயில்வே கேட்திடீரென மூடப்பட்ட தால் பொதுமக்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள 2 பள் ளிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தினமும் 2 கி.மீட்டர் தூரம் அலைக்கழிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று சார் ஆட்சியரிடம் மனு கொடுக்க சமூக ஆர்வலர் பீர்காதர், தவெக நகரச் செயலாளர் முகமது இஸ்மாயில், இணை செயலாளர் லெட்சுமணன், சேரை பி.மாரியப்பன் புதல்வன் பிரகாஷ், தவெக நிர்வாகிகள் மணிகண்டன், முருகன், காங்கிரஸ் ரவிசங்கர், கவுன்சிலர் ஆனி, மல்லிகா,மதிமுக குட்டி பாண்டியன், விசிக மாவட்ட துணைச் செலாளர் மாதவன், சித்திக், மீரான், லெட்சுமணன் மற்றும் தென்பகுதி மக்கள் இது தொடர்பாக சேரன்மகாதேவி சப்கலெக்டர் ஆயுஷ் குப்தாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள், மாணவர்கள் நலன்கருதி சேரன்மகாதேவியில் அடைக்கப்பட்ட ரயில்வே கேட் அருகில் ஆட்டோ, டூவிலர் செல்லும் வகையில் சுரங்கப்பாதை அமைத்து பொதுமக்கள் நலன் காக்க வழிவகைசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.






