26வது ஆண்டு திருமண நாளை சிறப்பாக கொண்டாடிய திமுக மூத்த உடன்பிறப்பு சுரேஷ் பாலியர்நேசன்
நெல்லை:
தி.மு.கழகத்தின் மூத்த உடன்பிறப்பும், கழகத்தின் அமைப்புச்சாரா அணியின் அர்ப்பணிப்பு மிக்க தொண்டருமான சுரேஷ் பாலியர்நேசன் அவர்களின் 26வது ஆண்டு திருமண நாள் விழா சமாதானபுரத்தில் மகிழ்ச்சிகரமாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில், 8வது வார்டு தி.மு.கழகத்தின் சார்பில் கழகத்தின் மூத்த முன்னோடியும் சமூக சேவகருமான டாக்டர் ரா. ஞானசோமராஜ் தலைமையில் சிறப்பு வாழ்த்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கழக முன்னோடிகள் கவிதா குழந்தை ஏசு, மாரி, பிரின்ஸ்குட்டி, பிரகாஷ், ஆனந்த், ராகுல் முத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டு சுரேஷ் பாலியர்நேசன் அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி, திருமண நாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
தொடர்ந்து, திருமண நாளை முன்னிட்டு கேக் வெட்டிய சுரேஷ் பாலியர்நேசன், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் கேக் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். அப்போது கழக நிர்வாகிகள் மற்றும் நண்பர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து, மேலும் பல ஆண்டுகள் குடும்ப நலனுடனும், மக்கள் சேவையுடனும் வாழ வாழ்த்தினர்.
மேலும், சமாதானபுரம் தி.மு.கழகத்தின் சார்பிலும், சமாதானபுரம் சி.ஐ.டி.யு. ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் சார்பிலும் மாரி அவர்கள், தனது நண்பரான சுரேஷ் பாலியர்நேசனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு திருமண நாள் விழாவை சிறப்பித்தனர்.
பட விளக்கம்:
சுரேஷ் பாலியர்நேசன் அவர்களின் 26வது ஆண்டு திருமண நாளை முன்னிட்டு திமுக நிர்வாகிகள் மற்றும் நண்பர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து, கேக் வெட்டி கொண்டாடிய காட்சி






