அம்பையில் மக்கள் சட்ட உரிமைகள் கழகக் கூட்டம்

அம்பையில் மக்கள் சட்ட உரிமைகள் கழகக் கூட்டம்

அம்பை ஜூன் 8

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் மக்கள் சட்ட உரிமைகள் கழகத்தின் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது

கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் டி.பி.கணேசன் தலைமை தாங்கினார்

மாநில கல்விப் பிரிவு டாக்டர் கே.எஸ் மோனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்பேச்சிமுத்து
மாவட்ட துணை அமைப்பாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

கூட்டத்தில் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையாக செயல்பட்ட பழைய கட்டிடத்தில் சித்த மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்

சின்ன சங்கரன்கோவில் செல்லும் சாலையில் இடிந்துள்ள கால்வாய் பாலம்
சீரமைக்கபடவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

முன்னாள் உறுப்பினர் துரைசாமி ஐயப்பன் திடீர் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

கூட்டத்தில் திருமலை, இசக்கி, பட்டமுத்து, செல்லப்பெருமாள், பாலமுருகன் நாலாயிரம் ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்

முடிவில் செய்தி தொடர்பாளர் மாகத சுப்பிரமணியன் நன்றி கூறினார்