வெங்காடம்பட்டி சாதனை மாணவிக்கு பாராட்டு

வெங்காடம்பட்டி சாதனை மாணவி சர்மிதாவுக்கு பாராட்டு
ஆலங்குளம், மே

வெங்காடம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணவி சர்மிதா, தேசிய திறனாய்வு தேர்வான என்.எம்.எம்.எஸ் (NMMS) தேர்வில் சிறப்பான சாதனை படைத்துள்ளார். இதனால் அவருக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

சர்மிதா தற்போது புனித அருளப்பர் பள்ளி பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் ஆரம்பக் கல்வியை டிரஸ்ட் இந்தியா பள்ளி பள்ளியில் பெற்றுள்ளார்.

சமையல் கலை, சிலம்பக் கலை, இரத்ததான சேவை மற்றும் முதியோர் – குழந்தைகள் பராமரிப்பு சேவைகளால் புகழ்பெற்ற வெங்காடம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்தைக்கடை சமையல் அதிபர் வெற்றிவேல்முருகன் – லட்சுமி தம்பதியரின் மகளான வெ. சர்மிதா இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

மகளின் கல்விச் சாதனை குறித்து பெற்றோர் பெருமிதம் தெரிவித்தனர்.

மாணவி சர்மிதாவின் வெற்றியை பாராட்டும் வகையில் டிரஸ்ட் இந்தியா பள்ளி முதல்வர் சாந்தி திருமாறன் சால்வை அணிவித்து கௌரவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மாரிச்செல்வம், காளியம்மாள், முத்துசெல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவியை பாராட்டினர்.