தி.க.வின் நீட் எதிர்ப்பு போராட்டம்: திமுகவுடன் விஜய் அரசுக்கு ஆதரவு தரும் கட்சிகள் பங்கேற்பு!

நீட் (NEET) தேர்வை ரத்து செய்ய கோரி திராவிடர் கழகம் (DK) இன்று தமிழ்நாடு முழுவதும் நடத்திய போராட்டத்தில் திமுகவுடன் (DMK) முதல்வர் விஜய் அரசுக்கு ஆதரவு தரும் விசிக, சிபிஐ, சிபிஎம் கட்சிகளும் பங்கேற்றன.

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, சென்னையில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிபிஎம் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., திமுகவின் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

                                                                   தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இப்போராட்டம் நடைபெற்றது.