ஒன்றிய அரசுக்கு ஏஐ கருவிகளை சப்ளை செய்ய ஒப்பந்தம்

புதுடெல்லி: ஒன்றிய அரசின் டிஜிட்டல் முயற்சிகளுக்கு உதவும் வகையிலான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப கருவிகளை உருவாக்கித் தர ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய மின் ஆளுமைப் பிரிவு (என்இஜிடி), காக்டஸ் ஐடி நிறுவனத்துடன் இணைந்துள்ளது.

ஒன்றிய அமைச்சகங்களும், துறைகளும் தொடர்ந்து ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருவதால், காக்டஸ் நிறுவனம் விரிவான, நிஜ உலக தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான ஏஐ அமைப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தும் என அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அகிலேஷ் ஐயர் தெரிவித்துள்ளார்.