புனிதசூசையப்பர் ஆலயத் திருவிழா கொடியேற்றம்
அம்பை ஏப்.25
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் புனித சூசையப்பர் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
தொடர்ந்து நம்பிக்கையின் விழா, பகிர்வின் விமா, அன்னையின் விழா,இயேசுவின் கண்ணிகள் விழா, இறையழைத்தல் விழா, குடும்ப விழா, தேர்த் திருவிழா, நற்கருணைப் பெருவிழா, உழைப்போர் பெருவிழா ஆகிய விழாக்கள் நடைபெற உள்ளது
விழாவில் தூத்துக்குடி முன்னாள் ஆயர் யுவான் அம்புரோஸ் பாளை மறைமாவட்ட புதிய குரு மரிய ஜோமிக்ஸ்
ஆகிபோர் பங்கு பெற உள்ளனர்
கொடியேற்ற நிகழ்ச்சியில் மறைமாவட்ட அதிபர் அருள் அந்தோணி வீரவநல்லூர் பங்குத்தந்தை ஆரோக்கியராஜ் தாளார்குளம் பங்குத்தந்தை அலெக்ஸ் அருளகம் பங்குத்தந்தை சைமன், நாலாங்கட்டளை பங்குதந்தை அந்தோணிராஜ் ஆகியோர் மற்றும் ஜஸ்டின்ராஜ், நிகோலஸ், இருதயராஜ், அந்தோணிசாமி, எம்.சி.ஏ.மார்ட்டின் ஆகியோர் உட்பட பொதுமக்கள் பங்கு பேரவை நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டார்கள்






