சேவை உள்ளம் கொண்ட வெளிநாட்டு சகோதரிகள்
ஆலங்குளம் ஏப்.15
லானா லூகாஸ் ,நிலா லூகாஸ் ஆகிய இருவரும் ஒரு தாய் வயிற்று குழந்தைகள் நிலாலூகாஸுக்கு வயது 15 லானா லூகாஸுக்கு வயது 16 , அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியா மாநிலத்தில் ஓக்ஸ் கிறிஸ்டியன் பள்ளியின் மாணவிகள் லானா, லூகாஸ், நிலா லூகாஸ் இருவரும் அமெரிக்காவின் சோக்கர் (கால்பந்து) விளையாட்டில் வல்லுனர்கள்.
இந்திலையில் லானாவும் நிலாவும் வினையாட்டுவீரர் மற்றும் வீராங்கணைகளின் டீசர்ட்கள், ட்ரவுசர்கள் ஜாக்கெட்டுகள் ஜெர்சிகள் சாக்ஸ் பந்துகள், முதுகுப்பைகள் காற்றடைக்கும் பந்துகள் போன்றவற்றை சேகரிக்கிறார்கள்.
இவர்கள் பந்துகள் விற்பனை செய்யும் கடைகளுக்கு சென்று தங்களது நோக்கத்த விளக்குகின்றனர் அவர்களது உதவிகளையும் பெறுகின்றனர்
பின்னர் ஏராளமான பள்ளிகள் மற்றும் நிறைய நாடுகளுக்கு அனுப்பி வைக்கின்றனர்
இவர்கள் இருவரின் தாயார் சுஜாதா இந்தியாவிற்கு வந்து தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் தாலுகாவில் உள்ள வெங்காடம்பட்டி என்னும் பிரபல சேவா கிராமத்தில் தங்கியிருந்து டிரஸ்ட் நிறுவனத்தின் ஆதரவற்ற குழந்தை களுக்கு எழுத படிக்க, படம் வரைய மரம் வளர்க்க பள்ளிக்கு செல்ல என பல உதவிகளை ஆத்மார்த்தமாக செய்து வந்தது குறிப்பிடத்தக்கது
2026 கால்பந்து போட்டிகள் நடக்கப்போகும் தருணத்தில் ஏராளமான கால்சட்டை, டி.சர்ட் மற்றும் கால்பந்துகளை வெங்காடம்பட்டி டிரஸ்ட் தொண்டுநிறுவனத்திற்கு இந்த இரு பெண் குழந்தைகளும் அனுப்பி உள்ளனர் என அந்த நிறுவன முதன்மை வேலைக்காரர் பூ.திருமாறன் தெரிவித்தார்
இந்த இளம் வயதிலேயே மற்றவர்களுக்கு உதவி செய்யும் லானா. மற்றும் நிலா ஆகிய இரு சகோதரிகளின் சேவை மனப்பான்மையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்






