திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் வாக்கு சேகரிப்பு

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் வாக்கு சேகரிப்பு.

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பொறியாளர் கா. ராஜசேகரன் திருச்சி மகாராணி தியேட்டர் பிரதான சாலை ஜான் தோப்பு மற்றும் டவுண்டேஷன் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள தெருக்களில் மாநகர மாவட்ட செயலாளர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் நடந்து சென்று தனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இதில் மாநகர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் துணை மேயர் ஜே சீனிவாசன் அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் மலைக்கோட்டை பகுதி செயலாளர் அன்பழகன் பாஜக மாவட்ட தலைவர் ஒண்டி முத்து பேரவை மாநில இணைச் செயலாளர் அரவிந்தன் மற்றும் கார்த்திகேயன் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.