அம்பாசமுத்திரம் தொகுதியில் BSP வேட்புமனு தாக்கல்
அம்பாசமுத்திரம், ஏப்ரல் 4:
ஜெய் பீம்! முழக்கத்துடன், மிகப்பெரிய தேசிய கட்சி இந்தியாவின் மூன்றாவது மிகப் பெரிய தேசிய கட்சி பகுஜன் சமாஜ் கட்சி (BSP) வரவிருக்கும் 17வது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.

கட்சியின் நிறுவனர் கன்சிராம் மற்றும் பாபாசாகேப் அம்பேத்கர் ஆகியோரின் கொள்கைகளை முன்னிறுத்தி நடைபெறும் இந்தத் தேர்தலில், அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கான வேட்புமனு இன்று (04.04.2026) தாக்கல் செய்யப்பட்டது.
பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் தாய் ரமாபாய் அவர்களின் 120வது திருமண நாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்வில், கட்சியின் தேசிய தலைமை வழிகாட்டுதலின் படி அம்பாசமுத்திரம் தொகுதி வேட்பாளராக, ஊர்காடு பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ரா. இசைக்கண்ணன் B.Sc., LLB அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்நிகழ்வில், கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி அவர்களின் வாழ்த்துகளுடனும், மாநிலத் தலைவர் Dr.ஆனந்தன், மாநில துணைத் தலைவர் இளமான் சேகர், திருநெல்வேலி மாவட்ட தலைவர் சிவ சுப்பிரமணியன், மாவட்டச் செயலாளர் தனேஷ் செல்வன் ஆகியோரின் வழிகாட்டுதலுடனும் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.
மேலும், திருநெல்வேலி மாவட்ட பொருளாளர் சிவராஜ், பாராளுமன்ற பொறுப்பாளர் சித்தார்த் சீ. வாசன், அம்பாசமுத்திரம் தொகுதி தலைவர் ஏ.எம். ராம்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த தேர்தலில் சமூக சமத்துவத்தை முன்னிறுத்தும் வகையில் BSP வலுவான போட்டியை வழங்கும் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.






