திருச்சி கிழக்குமாவட்டம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி புதிய பொறுப்பாளர்கள் அறிமுக நியமனக்கூட்டம்

திருச்சி, மார்ச் 20:
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) சார்பில் புதிய பொறுப்பாளர்கள் அறிமுக நியமனக்கூட்டம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கட்சியின் மறு சீராய்வு பணிகள் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், திருச்சியில் புதிய பொறுப்பாளர்களை கட்சி நிறுவனர் திருமாவளவன் எம்.பி. அறிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட பட்டியலை பெற்ற திருச்சி கிழக்கு மாவட்ட நிர்வாகம், புதிய பொறுப்பாளர்களின் அறிமுக கூட்டம் மற்றும் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தை ஏற்பாடு செய்தது.
இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் கனியமுதன் தலைமை வகித்தார். மண்டலச் செயலாளர் பிரபாகரன் முன்னிலை வகித்தார்.
மேலும், முன்னாள் மண்டலச் செயலாளர் தமிழ்நாதன், சட்டமன்றத் தொகுதி செயலாளர் தங்கதுரை, மாநில செயலாளர் புரோஸ் கான், முன்னாள் பொருளாளர் சந்தனமொழி, மாநில நிர்வாகி ஏர்போர்ட் பெரியசாமி, மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் கஸ்தூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் புதிய பொறுப்பாளர்கள், தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்று, தேர்தல் பணிக்கான படிவங்களை பெற்றுக்கொண்டு தீவிர பணியில் ஈடுபட உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.