பிரான்ஸ், செப்.02: பிரான்ஸ் தலைநகரில் பாராவிளையாட்டு போட்டிகள் ஆகஸ்ட் 28 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற முதல் திருநங்கை என்ற பெருமையை இத்தாலியைச் சேர்ந்த வாலண்டினா பெட்ரில்லோ பெற்றுள்ளார்.50 வயதானவாலண்டினா பெட்ரில்லோ பார்வை குறைபாடுள்ள விளையாட்டு வீரர்களுக்கான T12 பிரிவில் 200மீ மற்றும் 400மீ ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றார். 1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இத்தாலிய ஓட்டப்பந்தய வீரர் பியட்ரோ மென்னியா தங்கம் வென்றதைப் பார்த்து 7 வயதிலேயே தடகள விளையாட்டின்மீதுகாதல் கொண்டதாக பெட்ரில்லோ தெரிவித்தார். தன் வாழ்க்கையின் பெரும் பகுதியை ஆணக வாழ்ந்த வாலண்டினா பெட்ரில்லோ கடந்த 2017ஆம் ஆண்டு ஹார்மோன் தெரபி சிகிச்சை எடுத்துக்கொண்டு திருநங்கையாக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதல் திருநங்கை!






