பாரா ஒலிம்­பிக்­கில் பங்­கேற்ற முதல் திரு­நங்கை!

பிரான்ஸ், செப்.02: பிரான்ஸ் தலை­ந­க­ரில் பாராவிளை­யாட்டு போட்­டி­கள் ஆகஸ்ட் 28 அன்று தொடங்கி நடைபெற்று வரு­கி­றது.பாரா ஒலிம்­பிக் போட்டி­யில் பங்­கேற்ற முதல் திரு­நங்கை என்ற பெரு­மையை இத்­தா­லி­யைச் சேர்ந்த வாலண்­டினா பெட்­ரில்லோ பெற்­றுள்ளார்.50 வய­தானவாலண்­டினா பெட்­ரில்லோ பார்வை குறைபா­டுள்ள விளையாட்டு வீரர்­க­ளுக்­கான T12 பிரி­வில் 200மீ மற்­றும் 400மீ ஓட்­டப்பந்­த­யத்­தில் பங்கேற்­றார். 1980 மாஸ்கோ ஒலிம்­பிக்­கில் 200 மீட்டர் ஓட்­டப்­பந்­த­யத்­தில் இத்­தா­லிய ஓட்­டப்­பந்­தய வீரர் பியட்ரோ மென்­னியா தங்­கம் வென்­றதைப் பார்த்து 7 வய­தி­லேயே தட­கள விளை­யாட்­டின்மீதுகாதல் கொண்­ட­தாக பெட்­ரில்லோ தெரி­வித்­தார். தன் வாழ்க்­கை­யின் பெரும் பகு­தியை ஆணக  வாழ்ந்த வாலண்­டினா பெட்­ரில்லோ கடந்த 2017ஆம் ஆண்டு ஹார்­மோன் தெரபி சிகிச்சை எடுத்­துக்கொண்டு திரு­நங்­கை­யாக மாறி­னார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.