சட்டப்பேரவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த போது எடப்பாடியை ஆதரித்தது மிகப்பெரிய தவறு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பேச்சு
வீரவநல்லூர் மார்ச் 18 சட்டப்பேரவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த போது எடப்பாடி ஆதரித்தது நான் மிகப்பெரிய தவறு செய்து விட்டேன் என்று வீரவநல்லூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பேசினார்.
நெல்லை மேற்கு மாவட்டம் திமுக சார்பில் அம்பாசமுத்திரம் சட்டப்பேரவை தொகுதி தேர்தல் பிரச்சார ஆலோசனைக் கூட்டம் வீரவநல்லூரில் நடந்தது கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமை வகித்தார் ஒன்றிய செயலாளர்கள் முத்துப்பாண்டி பிரபு முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர் தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் வரவேற்றார்.
கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசுகையில் தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலினுக்கு நான் நன்றி கடன் பட்டு உள்ளேன் ஐந்து ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு தேவையான திட்டங்களை முதல்வர் மு க ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார். எதிர்கால சந்ததியினர் பயன்பெறும் வகையில் திட்டங்களை கொண்டு வந்துள்ளார் இந்திய அரசு ஒவ்வொரு மாநிலங்களுக்கும் நிதி பகிர்வு அளிக்கிறது மாநில மக்கள் தொகை அவர்களின் தரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு நிதி பகிர்வு வரையறுக்கப்படும். அந்த வகையில் தமிழகத்திற்கு ஒன்றிய அரசு நாலு சதவீதம் மட்டுமே வழங்கி உள்ளது ஒன்றிய அரசுக்கு மகாராஷ்டிரா மாநிலமும் தமிழ்நாடு அதிக அளவில் வருகை மூலம் நிதி அளிக்கின்றனர் அதிக வரி செலுத்தியும் தமிழகத்திற்கு நிதி பகிர்வில் மத்திய அரசு ஒரவஞ்சனையுடன் செயல்பட்டு வருகிறது.
தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் ஆட்சிக்கு கெட்ட பெயர் வர வேண்டும் என்ற நோக்கத்தில் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நிதியை எடப்பாடி பழனிசாமி தடுக்கிறார் ,ஒன்றிய அரசு தமிழகத்துக்கு முறையான நிதி பகிர்வு அளிக்காத நிலையில் திறமையான ஆட்சியின் மூலம் தமிழகத்திற்கு பொருளாதார வளர்ச்சியில் 11.08 சதவீதத்தை எட்டியுள்ளது. சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிச்சாமி மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த போது என்னுடைய ஆதரவில் இருந்த 11 சட்டப்பேரவை உறுப்பினர்களும் அவருக்கு ஆதரவு அளித்த காரணத்தினால் தான் எடப்பாடி பழனிச்சாமி அரசு தப்பியது அவர் முதல்வர் பதவியில் தொடர்ந்தார் .
அரசியல் ரீதியாக எடப்பாடியை ஆதரித்தது நான் மிகப்பெரிய தவறு செய்து விட்டேன் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அதிமுகவை படுகுழியில் தள்ளி மீள முடியாத நிலைக்கு கொண்டு வந்து விட்டார் எடப்பாடி தமிழக அரசு நிறைவேற்றி வரும் திட்டங்களை பிற மாநிலங்கள் வியந்து பார்க்கின்றன முதல்வர் கொண்டு வந்துள்ள சிறப்பான திட்டங்களால் மீண்டும் திமுக வரை ஆட்சியில் அமர வேண்டும் என மக்கள் முடிவு செய்து விட்டனர் என்றார், கூட்டத்தின் இறுதியில் வீரவநல்லூர் பேரூர் கழக செயலாளர் வீ.சுப்பையா நன்றி கூறினார்.
நிகழ்வில் முன்னாள் எம்பிக்கள் ரவீந்திரநாத், கோபாலகிருஷ்ணன்,முன்னாள் எம்எல்ஏ ஐயப்பன், மாநில திமுக சுற்றுச்சூழல் அணி தலைவர் பூங்கோதை ஆலடி அருணா, ஆலங்குளம் பேரவை தொகுதி பொறுப்பாளர் கணேஷ்குமார் ஆதித்தன், மாவட்ட துணை செயலாளர் தமயந்தி,உட்பட பலர் கலந்து கொண்டனர்.






