வாஷிங்டன், செப்.1 அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடை பெற்ற முதலீட்டாளர் மாநாட்டில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் 8 நிறுவனங்கள், தமிழகத்தில் தொழில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்டன.ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள், முதலீடு, வேலைவாய்ப்பு பற்றிய விவரம் வருமாறு: * சென்னைசிறுசேரி சிப்காட்டில் ரூ.450 கோடியில் நோக்கியா நிறுவனம் சார்பாக தொழிற்சாலை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதனால் 100 பேருக்கு வேலை கிடைக் கும்.* PAY PAL நிறுவனத்துடன் ஒப்பந்தத்தின் மூலம் சுமார் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.*சென்னையில் செமி கண்டக்டர் உற்பத்தி தொழில்நுட்ப மையம் அமைகிறது. ஏ.ஐ.,தொழில் நுட்ப வசதிகள் கொண்ட அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சி மையமாக அமைக்க ap- plied materials நிறுவனம் திட்டமிட்டுள்ளது.* செம்மஞ்சேரியில் மைக்ரோ சிப் நிறுவனம் ரூ.250 கோடியில் முதலீடு செய்ய உள்ளது. இதனால் 1500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக் கும். * மதுரை எல்காட் வடபழஞ்சியில் ரூ.50 கோடியில் புதிய தொழில்நுட்ப மையத்தை இன்பின்க்ஸ் அமைக்கிறது. * கோவை சூலூரில் செமி கண்டக்டர் உபகரணஆலையை ஈல்டு என்ஜினியரிங் நிறுவனம் அமைக்கிறது. ரூ.150 கோடியில் அமையும் ஆலை மூலம் 300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக் கும்.* செங்கல் பட்டில் ரூ.400 கோடி முதலீட்டில் ஓமியம் நிறுவனத்தின் உற்பத்தி மையம் அமைய உள்ளது. இதனால் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். * geakminds நிறுவனத்துடன் ஏற்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், 500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக் கும். * சான்பிரான்சிஸ் கோவில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் இதுவரை 8 நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் துவங்க அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொண்டுள்ளன. சென்னை உள்ளிட்ட இடங்களில் ரூ.900 கோடி மதிப்பில் முதலீடுகள், 4100 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவிலிருந்து முதலீடுகள் மேலும் அதிக தமிழகத்திற்கு ஈர்க்கப்படும். ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதரத்தை நோக்கி பயணத்தை முன்னெடுத்து செல்கிறோம்’ என பதிவிட்டுள்ளார்.
பே பால், நோக்கியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்; சென்னையில் அமைகிறது செமிகண்டக்டர் மையம்!






