பே பால், நோக்கியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்; சென்னையில் அமைகிறது செமிகண்டக்டர் மையம்!

வாஷிங்­டன், செப்.1 அமெ­ரிக்­கா­வில் சான்­ பிரான்சிஸ்கோ நகரில் நடை பெற்ற முதலீட்­டா­ளர் மாநாட்டில், முதல்­வர் ஸ்டாலின் முன்னி­லை­யில் 8 நிறுவ­னங்­கள், தமிழகத்­தில் தொழில் முதலீடு செய்ய ஒப்­புக்­கொண்­டன.ஒப்பந்­தம் செய்த நிறுவ­னங்­கள், முதலீடு, வேலை­வாய்ப்பு பற்றிய விவரம் வருமாறு: * சென்னைசிறு­சேரி சிப்­காட்­டில் ரூ.450 கோடி­யில் நோக்கியா நிறுவ­னம் சார்­பாக தொழிற்­சாலை அமைக்க புரிந்து­ணர்வு ஒப்­பந்­தம் கையெ­ழுத்­தாகி உள்ளது. இத­னால் 100 பேருக்கு வேலை கிடைக்­ கும்.* PAY PAL நிறுவ­னத்­து­டன் ஒப்­பந்­தத்­தின் மூலம் சுமார் 1000 பேருக்கு வேலை­வாய்ப்பு கிடைக்கும்.*சென்­னை­யில் செமி கண்­டக்­டர் உற்­பத்தி தொழில்நுட்ப மையம் அமைகி­றது. ஏ.ஐ.,தொழில் நுட்­ப வசதிகள் கொண்ட அதிநவீன  தொழில்நுட்ப வளர்ச்சி மையமாக அமைக்க ap- plied materials நிறு­னம் திட்­ட­மிட்­டுள்­ளது.* செம்­ம்­சே­ரியில் மைக்ரோ சிப் நிறுவ­னம் ரூ.250 கோடியில் முதலீடு செய்ய உள்­ளது. இத­னால் 1500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்­ கும். * மதுரை எல்­காட் ஞ்­சியில் ரூ.50 கோடியில் புதிய தொழில்நுட்ப மையத்தை இன்பின்க்ஸ் அமைக்கி­றது. * கோவை சூலூரில் செமி கண்­டக்­டர் உபக­ரணஆலையை ஈல்டு என்ஜினியரிங் நிறுவ­னம் அமைக்கி­றது. ரூ.150 கோடியில் அமை­யும் ஆலை மூலம் 300 பேருக்கு வேலை­வாய்ப்பு கிடைக்­ கும்.* செங்­கல் ­பட்­டில் ரூ.400 கோடி முதலீட்­டில் ஓமி­யம் நிறுவ­னத்­தின் உற்­பத்தி மையம் அமைய உள்­ளது.  இதனால் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். * geakminds நிறுவ­னத்­து­டன் ஏற்­பட்டுள்ள புரிந்து­ணர்வு ஒப்பந்­தத்­தில், 500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்­ கும். * சான்பிரான்சிஸ் கோ­வில் நடந்த முதலீட்டா­ளர்­கள் மாநாட்­டில் இதுவரை 8 நிறுவ­னங்­கள் தமிழகத்தில் தொழில் துவங்க அரசு­டன் புரிந்து­ணர்வு ஒப்­பந்­தங்­கள் செய்து கொண்டுள்ளன. சென்னை உள்ளிட்ட இடங்­க­ளில் ரூ.900 கோடி மதிப்­பில் முதலீடுகள், 4100 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வழி வகை செய்­யப்­பட்­டுள்ளது. அமெ­ரிக்­கா­விலி­ருந்து முதலீடுகள் மேலும் அதிக தமிழகத்திற்கு ஈர்க்­கப்­ப­டும். ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதரத்தை நோக்கி பய­ணத்தை முன்­னெ­டுத்து செல்கி­றோம்’ என பதிவிட்டுள்­ளார்.