டிசம்பர்:17 எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாநில பொதுச்செயலாளர் பங்கேற்பு

டிசம்பர்:17 எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாநில பொதுச்செயலாளர் பங்கேற்பு

எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர் புறநகர் நிர்வாகிகள் கூட்டம் மாநகர் மாவட்டம் அலுவலகம் மேலப்பாளையத்தில் வைத்து மண்டல தலைவர் சிக்கந்தர் தலைமையில் காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. மாநகர் மாவட்ட மாவட்ட தலைவர் பீர்மஸ்தான் வரவேற்றுப் பேசினார். சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் அஹமது நவவி கலந்து கொண்டு நெல்லையில் பூத்கமிட்டி மாநாடு நடத்துவது குறித்து பேசினார், புறநகர் மாவட்ட தலைவர் சிராஜ், மாவட்ட பொதுச் செயலாளர் களந்தை மீராசா , அமைப்பு பொதுச் செயலாளர் முல்லை மஜீத், மாநகர் மாவட்ட துணை தலைவர் சாகுல்ஹமீது உஸ்மானி, புறநகர் மாவட்ட செயலாளர் அம்பை ஜலில், மாநகர் மாவட்ட செயலாளர் பர்கிட் அலாவுதின், மவாட்ட செயற்குமு உறுப்பினர்கள், இம்ரான் , அஹமதுரியாஸ் வழக்கறிஞர்கள் முகம்மது ஷபி, இஸ்மாயில் ஆகியோர்கள் கலந்து கொண்டனர் கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நெல்லை மாவட்ட முழுவதும் விவசாயிகளுக்கு யூரியா தட்டுப்பாடு நிலவி வருகிறது, எனவே மாவட்ட நிர்வாகம் முழுவதும் தட்டுப்பாடு இல்லாத யூரியா வழங்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை என எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்துகிறது கங்கைகொண்டான் பகுதியில் சுமார் 17 ஆடுகளை தெருநாய்கள் கடித்து கொன்றது. எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சிறப்பு கவனம் எடுக்க வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகிறது வருகின்ற ஜனவரி மாதம் BLA2, BLC, குறித்து மாநாடு நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இறுதியாக மாநகர் மாவட்ட பொதுச்செயலாளர் அன்வர் நன்றி கூறினார்

இவண்
பீர்மஸ்தான்
மாவட்ட தலைவர்
எஸ்டிபிஐ கட்சி
மாநகர் மாவட்டம்
நெல்லை
96886 44683