வீரவநல்லூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் 73வது பிறந்தநாள் விழா

வீரவநல்லூர்,

மார்ச் 2:
தமிழக முதலமைச்சரும் மு. க. ஸ்டாலின் அவர்களின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு, வீரவநல்லூர் நகர திமுக சார்பில் இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

நகர திமுக செயலாளர் வி. சுப்பையா தலைமையிலும், அவைத்தலைவர் இரா. பழனி முன்னிலையிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. குறிப்பாக பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.

 

இந்நிகழ்வில் பொருளாளர் முத்துக்குமார், சுபாஷ், தாமரை செல்வி, அண்ணாதுரை, சுப்பு, குட்டி, சுந்தரேசன், மணி, பாலசுப்ரமணியன், துணை செயலாளர் முத்துராமலிங்கம், கழக மூத்த முன்னோடி ஜெ. ராஜன், ஜான் மத்தியஸ், கவுன்சிலர்கள் சண்முகவேல், அனந்தராமன், அப்துல் ரகுமான், சின்ன துரை, சக்கரவர்த்தி, தொழிற்சங்க அண்ணாதுரை, மாவட்ட வர்த்தக அணி கிருஷ்ணன், அங்கப்பன் உள்ளிட்ட வார்டு செயலாளர்கள் மற்றும் கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஒற்றுமை மற்றும் உற்சாகத்துடன் நடைபெற்றது.