முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அமெரிக்காவில் உற்சாக வரவேற்பு!

சான்பிரான்சிஸ்கோ: தமிழகத்­துக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகை­யில் அமெரிக்கா சென்றுள்ள தமிழக முதல்­வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வர­வேற்பு அளிக்­கப்பட்­டது. அங்­குள்ள சான்பிரான் சிஸ்கோ விமான நிலை­யத்­தில், அமெ­ரிக்க நாட்­டின் சான்பிரான்சிஸ்­கோ­விற்­கான இந்­திய துணைத் தூதர் ஸ்ரீகர் ரெட்டி, தமிழக தொழில் துறை அமைச்­சர் டி.ஆர். பி.ராஜா மற்­றும் அமெரிக்க வாழ் தமிழர்­கள் ஆகி­யோர் முதல்­வர் ஸ்டாலினுக்கு உற்­சாக வர­வேற்பு அளித்­த­னர். இது குறித்து முதல்­வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அமெ­ரிக்க மண்ணில் த ரை­யி­றங்­கி ய­ போது தாய்த்­த­மிழ் உற­வுகள் அளித்த நெகிழ்ச்­சியான வர­வேற்­பில்” என தெரிவித்து புகைப்­ப­டங்­களை இணைத்­துள்­ளார். தமிழகத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெ­ரிக்க டாலர் பொரு­ளா­தார மாநி­ல­மாக மாற்ற முதல்­வர் ஸ்டாலின் க்கு நிர­ண­யித்­துள­ளார்.இதற்­காக பல்­வேறு முயற்­சிகளை தமிழக அரசு மேற்­கொண்டு வருகி­றது. இதன் ஒரு பகுதியாக முதல்­வர் ஸ்டாலின் அரசு முறை பயணமாக கடந்த 27-ம் தேதி அமெரிக்கா புறப்­பட்­டார். சென்னை­யில் இருந்து துபாய் வழியாக அமெ­ரிக்­கா­வின் சான்பிரான் சிஸ்கோக்கு முதல்­வர் ஸ்டாலின் சென்றுள்­ளார்.தமிழகத்துக்­கான தொழில் முதலீடுகளை ஈர்த்த பிறகு, செப்.14-ம் தேதி அவர் தமிழகம் திரும்புவது போல ணம் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.