சேரன்மகாதேவி வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து கிராம உதவியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்

சேரன்மகாதேவி வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் சங்கத்தின் சார்பாக தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் முடிவுப்படி நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு கால முறை ஊதியத்தை ரத்து செய்து காலமுறை ஊதியம் D பிரிவு வழங்கிட வேண்டும்,
அரசு ஆணை எண் 33 திருத்தம் செய்து கிராம உதவியாளர்களுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கிட வேண்டும், இறந்துவிட்ட மற்றும் ஓய்வு பெற்ற கிராம உதவியாளர்களுக்கு GPS பிடித்தம் செய்த பணப்பலனை உடனடியாக வழங்க ஆணை பிறப்பிக்க வேண்டும்,
புதிய ஓய்வு ஊழியத்தை ரத்து செய்ய பழைய ஓய்வு ஊதியத்தை வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்
இக்கூட்டத்திற்கு சேரன்மகாதேவி வட்ட தலைவர் அண்ணாதுரை தலைமையிலும், பிச்சுக்குட்டி முன்னிலையிலும், சேதுராமானந்தம் வரவேற்புரை, சேரன்மகாதேவி வட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட மகளிர் அணி தலைவி கனக லட்சுமி, மாவட்ட துணை செயலாளர் செல்வகுமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர் மற்றும் பல கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.