புதுடெல்லி: பொதுமக்கள் குறைகளை 21 நாட்களுக்குள் தீர்க்க வேண்டும் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.குறைகளைத் தீர்க்குமாறு கோரிக்கை அல்லது புகார் கொடுக்கும் பொதுமக்களின் மனுக்கள் மீது30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற விதி தற்போது உள்ளது.இந்நிலையில் பொதுமக்களின் குறை தீர்ப்பு கால அவகாசத்தை 21நாட்களாக குறைத்தல் உள்ளிட்ட புதிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.மத்திய அரசின் ஒவ்வொரு துறையிலும் இனி இந்த புதிய விதிமுறைகள் பின்பற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது www.pgportal.gov.in என்ற பெயரில் குறைதீர்ப்பு மனுக்களுக்கான தனி இணையதளம்உருவாக்க ப்பட்டுள்ளது.இந்த இணையதளத்தை பொதுமக்கள் அணுகி தங்களது புகார்களைத் தெரிவிக்கலாம்.ஒற்றைச்சாளர முறையில் இந்தகோரிக்கை மனுக்கள் பரிசீலிக்கப்படும்.மேலும் குறைகளைத் தீர்க்க தற்போது பின்பற்றப்பட்டு வரும் 30 நாட்கள் கால அவகாச த்தை 21நாட்களாக மத்திய அரசு குறைத்துள்ளது. இந்த இணையதளத்தில் பொதுமக்கள் எளிதாக தங்களது குறைகளைப் பதிவிடமுடியும். அந்த அளவுக்கு பொதுமக்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில் இணைய தளம் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.21 நாட்களுக்குள் குறைகளைத் தீர்க்க முடியவில்லை என்றால், சம்பந்தப்பட்டவருக்கு இடைக்கால பதிலை சம்பந்தப்பட்ட துறையோ அல்லது நிர்வாகமோஅளிக்கவேண்டும் என்று மத்திய நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது மக்கள்குறை தீர்ப்பு துறை (DARPG) தெரிவித்துள்ளது.மேலும் குறைகள் தீர்க்கப்பட்ட விவரத்தை சம்பந்தப்பட்ட பொது மக்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் இ-மெயில் மூலமாகஅனுப்பவேண்டும் என்றும்புதியவிதி முறைகளில்மத்திய அரசு கூறியுள்ளது மேலும் சம்பந்தப்பட்டவரிடம் இருந்து குறைகள் தீர்க்கப்பட்ட தற்கான பதிலையும், அவரதுகருத்துகளையும் பெறவேண்டும் என்றும், ஒருவேளைகுறை தீர்ப்பு விஷயத்தில் சம்பந்த ப்பட்டவர் திருப்தி அடைய வில்லை யென்றால் அவர்கள் மீண்டும் கோரிக்கை மனுவை துறையின் மூத்த அதிகாரிக்கு அனுப்பலாம் என்றும் புதியவிதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல்,ஒவ்வொரு துறையிலும் பொது மக்கள்குறை தீர்ப்புக்காக நோடல் அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த அதிகாரிகள், பொதுமக்களின் குறைகளை உடனடியாகவும், நியாயமாகவும், திறமையாகவும் நிவர்த்தி செய்வார்கள்.மேலும், ஒரு துறைக்குகோரிக்கை மனு வரும்போது,அதுதங்கள் அமைச்சகம், துறை, அலுவலகம் தொடர்பானதுஅல்ல என்று குறிப்பிடக் கூடாது .மேலும் அந்தப் புகாரை சம்பந்தப்பட்ட துறைக்கோ அல்லது அதிகாரிக்கோ மாற்ற முயற்சிக்க வேண்டும்.நிலுவையில் உள்ளமனுக்களை கண்காணித்தல், திறமையான வகையில் மனுக்களைப் பிரித்தல்,செயல்முறை மற்றும் கொள்கை மேம்பாடுகளுக்கான கருத்துகளைஆய்வு செய்தல், பிரச்சினைக்கான மூலகாரணத்தை ஆராய்தல், புகார்களின் மாதாந்திர தகவல் தொகுப்புகளைத் தயார்செய்தல் ஆகியவை நோடல் அதிகாரிகளின் பொறுப்புகளாக இருக்கும்.குறைதீர்ப்பு மையங்கள்: மேலும் ஒவ்வொரு அமைச்சகம், துறைகளின் சார்பில் முழுமையாக செயல்படும் வகையில்,போதிய ஆள் பலத்துடன் குறைதீர்ப்பு மையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும்பொதுமக்கள்குறைதீர்ப்புதுறை (DARPG) தெரிவித்துள்ளது.
21 நாட்களுக்குள் பொதுமக்கள் குறைகளை தீர்க்க வேண்டும் புதிய விதிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு!






