அருள் தரும் மரகதாம்பிகை சமேத அருள்மிகு பூமிநாத சுவாமி திருக்கோவில் தேரோட்டம்

02.01.2026,

திருநெல்வேலி மாவட்டம்.

சேரன்மகாதேவி வட்டம், வீரவநல்லூர் அருள் தரும் மரகதாம்பிகை சமேத அருள்மிகு பூமிநாத சுவாமி திருக்கோவில் மார்கழிப் பெருந்திருவிழா 25.12.2025 அன்று 5:00 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கி திருவிழா நாட்களில் காலை 8 மணி அளவில் சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டு மாலை 7 மணி அளவில் சுவாமி மற்றும் அம்பாள் காமதேனு வாகனம் அதிகாரணந்தி கற்பகத்தெரு கமல வாகனம் பூத வாகனம் சிம்ம வாகனம் வெள்ளி ரிஷப வாகனம் இந்திர வாகனம் பூங்கோயில் வாகனம்,ஏக சிம்மாசனம் ஆகியவற்றில் எழுந்தருளி அருள் பாலித்தனர், ஏழு மற்றும் எட்டாம் திருநாள் திருவாதிரை நாயகன் நடராஜபெருமான் சிகப்பு சாத்தி, வெள்ளை சாத்தி, பச்சை சாத்தி அலங்காரங்களில் அருள் பாலித்தார்.

திருவிழாவின் ஒன்பதாம் திருநாளான 02.01.2026 இன்று விநாயகர், சுப்ரமணியர் மாணிக்கவாசகர் சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனிச் சப்பரங்களிலும், பூமிநாதசுவாமி மற்றும் உடனுறை அம்பாள்-சுவாமி திருத்தேரிலும், மரகதாம்பிகை -அம்பாள் திருத்தேரிலும் திருவீதி உலா பவனி வர திருத்தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இத்திருவிழாவில் திருக்கோயில் செயல் அலுவலர் திருமதி ஆ.மாடத்தி, திருக்கோயில் அறங்காவலர்கள்- திரு.கருப்பசாமி அவர்கள், திரு.சுப்பு குட்டி அவர்கள், திருமதி.செல்வி அவர்கள், கட்டளைதாரர்-ஓசூர்

கண்ணன்,வார்டு கவுன்சிலர்கள்-திரு சிதம்பரம், திருமதி வெங்கடேஸ்வரி திருமதி தாமரைச்செல்வி சந்திரா தெய்வநாயகம் முத்துக்குமார் சந்தானம் ஆனந்தராமன் ஆறுமுகம் சின்னத்துரை ஆகியோர், திருக்கோயில் பணியாளர்கள், திருவாசகம் அடியார்கள், உழவாரப்பணி அடியார்கள் மற்றும் திரளான ஊர் பொதுமக்கள் திருவாதிரை பெருந் திருத்தேரோட்டத் திருவிழாவில் கலந்துகொண்டு சிறப்பித்து, திருத்தேர் வடம் பிடித்து, திருத்தேர் மாலை 04.30 மணி அளவில் இரண்டு திருத்தேர்களும் நிலையம் வந்தடைந்தன. தேரை வடம் பிடித்து இழுத்து வந்த பக்தர்களுக்கு வீரவநல்லூர் ஏழாவது வார்டு கவுன்சிலர் வெங்கடேஸ்வரி சூடான பாதம்பால் வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது