புதுடில்லி: யுனெஸ்கோ அமைப்பின் கலாச்சார பாரம்பரிய பட்டியலில் தீபாவளி பண்டிகை சேர்க்கப்பட்டுள்ளது.
அவரது அறிக்கை ; இந்தியாவுக்கு ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள் , மனித குலத்தின் கலாசார பாரம்பரியப் பட்டியலில் ( UNESCO List of Intangible Cultural Heritage of Humanity ) தீபாவளிப் பண்டிகையும் சேர்க்கப்பட்டுள்ளது . பிரதமர் மோடியின் பதவி காலத்தில் , இந்தியாவின் கலாசார பாரம்பரியங்களுக்கு , முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்து வருகிறது . இந்த புதிய மைல்கல்லும் , அதன் பாதையை வலுப்படுத்துகிறது. தீபாவளியைக் கொண்டாடும் நோக்கமான , நம்பிக்கை , நல்லிணக்கம் மற்றும் சமத்துவம் போன்றவற்றை உலகளவில் எடுத்துச் செல்ல இந்தக் கவுரவம் உதவுகிறது , இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.






