மதுரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சமத்துவ வழக்கறிஞர் பிரிவின் சார்பில் செயற்குழு கூட்டம்

மதுரை
10/11 /25

மதுரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சமத்துவ வழக்கறிஞர் பிரிவின் சார்பில் செயற்குழு கூட்டம் புறநகர் மாவட்டம் சார்பாக மதுரை யானைமலை ஒத்தக்கடை வழக்கறிஞர் ராம்குமார் சட்ட அலுவலகத்தில் இனிதே நடைபெற்றது.

நவம்பர் 26 சட்டநாளை சமத்துவ வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக எவ்வாறு கொண்டாடுவது, டிசம்பர் 6 புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை எவ்வாறு நாம் கலந்து கொண்டு புரட்சியாளருக்கு மரியாதை செலுத்தது குறித்தும்,

தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சில் வருகின்ற பார் கவுன்சில் தேர்தலில் எழுச்சித் தமிழர் அவர்கள் யாரை கை காட்டுகிறார்களோ அவர்களை அனைவரும் ஒற்றுமையாக நின்று அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று மூன்று முக்கிய கோரிக்களை வைத்துக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்திற்கு மதுரை மாவட்ட அமைப்பாளர் சிவலிங்கம் தலைமை தாங்கினார் வழக்கறிஞர் ராம்குமார் வரவேற்புரையாற்றினார்,சிறப்பு அழைப்பாளராக மாநில துணைச்செயலாளர்கள் அன்பழகன், வில்லவன்கோதை, வழக்கறிஞர்கள் மாதவன், சக்திவேல்,பாண்டியன், பெரியசாமி, ஆறுமுகம், சேகுவாரா பாண்டியன், தமிழரசி, வெண்ணி முத்து, பெருமாள், ராஜ்,மகேஸ்மதி, மேனகா, பாண்டியராஜன்,சுரேஷ் மற்றும் வழக்கறிஞர்கள் பலர் திரளாக கலந்துகொண்டனர், கூட்டத்தில் வழக்கறிஞர்களின் ஒவ்வொருத்தருடைய கருத்துக்களை கேட்டறிந்தனர்.

நிகழ்ச்சி ஒருங்கிளைப்பு வழக்கறிஞர் ராம்குமார்.

பாலகிருஷ்ணன்,
மதுரை மாவட்ட செய்தியாளர்