புது டெல்லி , ஆக. 20-: கொல்கத்தாவில் ஆர்.ஜி.கார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி என்ற அரசுஆஸ்பத்திரி உள்ளது. அங்கு ஒரு பெண் டாக்டர் கடந்த 9ந்தேதி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யபட்டார். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.விசராணையை சி.பி.ஐ.யிடம் கொல்கத்தா ஐகோர்ட்டு ஒப்படைத்தது.கடந்த 14ந்தேதிநள்ளிரவு, ஒரு மர்ம கும்பல் புகுந்து ஆஸ்பதிரியைத்சூறையாடியது. இதற்கிடையே,பெண்டாக்டர் கொலையை கண்டித்து நாடு முழுவதும் டாக்டர்களின் 24மணி நேரபோராட்டத்துக்கு இந்திய மருத்துவசங்கம் அழைப்பு விடுத்தது. நேற்று முன் தினம் காயில் இருந்து நேற்று காலை வரை போராட்டம் நடந்தது. இதனிடையே,பெண்டாக்டர் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. டெல்லி டாக்டர்கள் இன்று 8-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபடுட்ள்ளனர்.பல்வேறு மருத்துவமனைகளைச சேர்ந்த டாக்டர்கள் இணைந்து பேரணியில் ஈடுபட்டனர்.பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அரசுமருத்துவக்கல்லூரிகள் செயல் படவில்லை,மருத்துவமனைகளில் புற சிகிசசை நோயாளிகள் பிரிவில் அளிக்கப்படவில்லை என்பதால் மக்கள் அவதி அடந்தனர்.
டெல்லியில் டாக்டர்கள் தொடர் போராட்டம்-நோயாளிகள் அவதி!






