சென்னை, அக்.24 அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டு அரசாணையை ரத்து செய்தல் உள்ளிட்ட 6 அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நவ.7ம் தேதி புதிய தமிழகம் கட்சி சார்பில்
பேரணி நடைபெறும் என்று அக்கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.இது குறித்து இன்று அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறி தென் மாவட்டங்களி ல் தேவேந்திரகுல
வேளாளர் இளைஞர்களுக்கு எதிராகவும், வடக்கு மாவட்டங்களில் ஆதிதிராவிடர்களுக்கு எதிராகவும் அதிகரித்து வரும் வன்கொடுமைகளை தடுக்க வேண்டும். தென்தமிழகத்தில் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ள மற்றும் வருங்காலத்தில் தொடங்கப்பட விருக்கும்
தொழிற்சாலைகளில் கடினமான மற்றும் மதிப்பு குறைவான பணிகளுக்கு மட்டுமே தென் தமிழக இளைஞர்களை பயன்படுத்தும் போக்கினை தடுத்து, உயர் பதவிகளில் முன்னுரிமை தர
வேண்டும்.மாஞ்சோலை தோட்டத்தொழிலாளர்களுக்கு 2006ம்ஆண்டு வன உரிமைச் சட்டத்தின் படி ஒரு குடும்பத்திற்கு தலா 10 ஏக்கர் நிலம் வழங்கி அந்த ஏழை, எளிய மக்களின் வாழ்வுரிமை யை மாஞ்சோலையிலேயே நிலை நாட்ட வேண்டும். டாஸ்மாக்கடைகளை உடனடியாக மூடி பூரண மது விலக்கை கொண்டு வர வேண்டும்.அந்நிய முதலீட்டின் மூலம்தொடங்கப்படும் தொழிற்சாலைகளை சென்னையைமட்டும் மையமாக வைத்துத்தொடங்காமல் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி,விருதுநகர், ராமநாதபுரம்,மதுரை போன்ற தென்மாவட்டங்களில் பரவலாக தொடங்க வேண்டும்.அதற்கான விதிமுறைகளை புரிந்துணர்வு ஒப்பந்தத்திலேயே உருவாக்க வேண்டும்.இந்த 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் சென்னையில் நவ. 7- ம் தேதி ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி நடைபெறும். இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரி நவ.7-ல் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி: கிருஷ்ணசாமி!






