உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமில் கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் புள்ளூர் ஊராட்சியில் நடைபெற்ற டி.கடமங்குளம் புள்ளூர் ஊராட்சிகளுகான உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமில் கிராம பொதுமக்கள் ஏராளமானூர் கலந்துகொண்டு கலைஞர் மகளிர் உரிமைத்துறை பட்டா மாறுதல் ஆதார் உள்ளிட்ட அரசின் பல்வேறு திட்டங்களுக்கான தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். இந்நிகழ்வில் காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உஷா ஜெயராமன் மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் புவனேஸ்வரி வட்டாட்சியர் மாரீஸ்வரன் துணை வட்டாட்சியர் ராஜா சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் தேவாமிர்தம் ஊராட்சி செயலாளர் முத்துசாமி உட்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.