திமுக மகளிரணி சார்பில் விரகனூர் பகுதியில் 2000-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள்!

மதுரை தெற்கு மாவட்ட திமுக மகளிரணி சார்பில் விரகனூர் பகுதியில் 2000-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாளையொட்டி, மதுரை தெற்கு மாவட்ட திமுக மகளிரணி அமைப்பாளர் கிருத்திகா தங்கப்பாண்டியன் சால்பில், மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்டபட்ட 1,35,000 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விரகனூர் பகுதியில் சுமார் 2000-ற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் திமுக மதுரை தெற்கு மாவட்டச்செயலாளர் மணிமாறன், ஒன்றிய செயலாளர் தனபால், பொறுப்பாளர் சிவகாசி வனராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பாண்டியன், செல்வம், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் பாசபிரபு, கிளைச்செயலாளர் சந்திரன், மகளிர் தொண்டரணி பிரமிளா, காளிதாஸ், ஆதவன் மற்றும் தெற்கு மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்