தேமுதிக மாநாடு முன்னிட்டு கட்சி கொடியேற்றுவிழா!

பாசாரில் தேமுதிக மாநாடு முன்னிட்டு கட்சி கொடியேற்றுவிழா.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் வேப்பூர் அருகேயுள்ள பாசார் கிராமத்தில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநில மாநாடு வருகிற 2026 ஜனவரி 9 தேதி அன்று நடைபெற உள்ளது.

இந்நிலையில், மாநாட்டு திடலில் அமைக்கப்பட்ட சுமார் 75 அடி பிரமாண்ட கொடிக்கம்பத்தில் மாநாட்டை முன்னிட்டு முன்னோட்ட கொடி ஏற்றும் நிகழ்ச்சி தேமுதிக தலைமை நிலைய செயலாளரும் மண்டல பொறுப்பாளருமான பார்த்தசாரதி தலைமையில் மற்றும் கடலூர் மாவட்ட செயலாளர்கள் சிவக்கொழுந்து,உமாநாத் முன்னிலையில் நடைப்பெற்றது.

கட்சிகொடியினை பார்த்த சாரதி ஏற்றிவைத்தார்.

இதில் மாவட்ட,ஒன்றிய, நகர, கிளை, நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.