இன்று 14.9.2025 மதியம் 2.00 மணியளவில் பெ.வேல்முருகன் ஒருங்கிணைப்பில் மாவீரன் மலைசாமியின் நினைவுநாள்!

14.9.2025 இன்று (14.9.1989 – (36)

தலித் பேந்தர் இயக்கத்தின் தலைவர் மாவீரர் மலைச்சாமி
அவர்களின் இறுதிச்சடங்கில்
அண்ணன் திருமா_அவர்களின் நினைவேந்தல் உரை..!

கோடான கோடி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பிலும் வாழப்பாடி ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பிலும் செம்மார்ந்த வீர_வணக்கத்தை செலுத்துகிறோம் …!

‘தூங்குகின்ற சமுதாயத்தை தட்டி
எழுப்ப என்று சொல்லுவாய்…
இன்றைக்கு உன் இரங்கல் கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கிறேன்… நீ ஏன் உறங்கிக் கொண்டிருக்கிறாய் ? எத்தனை கூட்டங்கள் போட்டாய் ? ஒவ்வொரு கூட்டத்திலும் பக்கத்தில் நின்று கொண்டு என் பேச்சை கேட்டு ரசிப்பாய்.. உற்சாகப்படுத்துவாய்…

தம்பி, இந்த சமுதாயத்தை தட்டி எழுப்புவது தான் நம்முடைய லட்சியம்.. அம்பேத்கருடைய பெயரில் ஒரு கல்வி அறக்கட்டளை நிறுவி நம் பிள்ளைகளுக்கு கல்லூரி கட்ட வேண்டும்.. நம் வருங்கால சந்ததிக்கு பள்ளிக்கூடங்கள் கட்ட வேண்டும் என்று எத்தனை லட்சிய கனவுகள் கண்டாய் ? இப்போது எங்கே போய்விட்டாய் ? அம்பேத்கரிடம் ஆலோசனை கேட்கவா ? அண்ணா எங்களை ஏன் இப்படி பிரிந்துவிட்டு சென்றாய் ? எங்களுக்கு துக்கம் தொண்டை அடைக்கிறது அண்ணா ! இறுதியாக ஒன்று கேட்கிறேன்.. உன்னுடைய ஓயாத சுறுசுறுப்பையும், சலியாத மனதையும் இரவலாக கேட்கிறேன்.. நான் வரும்போது உன் காலடியில் சேர்த்து விடுகிறேன்…

வீர வணக்கம்! புகழ் வணக்கம்!
பெ வேல்முருகன் ஒன்றிய செயலாளர் வாழப்பாடி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சேலம் வடக்கு