திருச்சி செயின்ட் அந்தோணிஸ் மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் 22வது ஆண்டு விளையாட்டு போட்டி…
அமைச்சர் மகேஷ் பங்கேற்பு
திருச்சி கே.கே.நகர் ரங்கா நகரில் உள்ள செயிண்ட் அந்தோணிஸ் மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் 22வது ஆண்டு விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக துவங்கியது.
இப்போட்டிகளை தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு போட்டிகளை துவக்கிவைத்தார். பின்னர் அமைச்சர் மாணவ மாணவிகள் இடையே பேசுகையில் மாணவர்கள் கற்கின்ற காலங்களில் சிறப்பாக கற்று படித்த பள்ளியின் பெயரை காப்பாற்ற வேண்டும் மேலும் பெற்றோர்கள் மற்ற மாணவர்களோடு தங்களின் பிள்ளைகளை ஒருபோதும் ஒப்பிட்டு பார்க்க கூடாது. ஒவ்வொரு மாணவ மாணவிக்கும் தனி திறமைகள் இ

ருப்பதை கண்டுபிடித்து அவர்களை ஊக்கபடுத்தி உற்சாகபடுத்த வேண்டும் என கூறினார்.
மேலும் இப்பள்ளியின் சார்பில் இந்த வருடம் பள்ளி மாணவ மாணவிகளை ஏவுகணை தளமான இஸ்ரோ விற்கு அழைத்து செல்ல அனுமதி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.
முன்னதாக மாணவ மாணவிகளில் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் பள்ளி தலைவர் நேவில் ஜன்சி மரியா, பள்ளியின் துணை தலைவர் ஜராட்டு இருதயராஜ், பள்ளி தாளாளர் ஜெர்லின் ஐசக்ஸ், பள்ளியின் முதல்வர் டாக்டர் கிருஷ்ணன், அப்பகுதியின் மாமன்ற உறுப்பினர் பொற்கொடி ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த விளையாட்டு போட்டிகளை காண பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் திரளாக கலந்துகொண்டனர்.






