19.8.25 அன்று மக்கள் தேசம் கட்சியின் நிறுவனர் திரு.சாத்தை பாக்யராஜ் அவர்கள் உடல் நலமின்றி மறைந்த செய்தி பெரும் துயரத்தை அளிக்கிறது, என்றார் செய்தி அறிந்தவுடனே தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் துணைப்பொதுச் செயலாளர் வன்னிய அரசுவிடம் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த அனுப்பி வைத்தார். கட்சியின் சார்பில் இன்று இரவு மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினோம்.
திரு.சாத்தை பாக்கியராஜ் தென் மாவட்டங்களில் 90 களின் தொடக்கத்தில் சாதிய ஆதிக்கத்துக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டவர். நீலப்புலி என்றும் சாத்தையார் என்னும் இளைஞர்களால் அழைக்கப்பட்டவர். சாதிய கொடுமை எங்கு நடந்தாலும் உடனே அங்கு சென்று மக்களோடு மக்களாக நின்று போராடிய மரியாதைக்குரிய சாத்தையார் அவர்கள் இன்று நம்மிடையே இல்லை என்பது பெரும் வலியை தருகிறது. அத்தகைய ஆளுமைக்கு விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் செம்மார்ந்த வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறோம். அதை தொடர்ந்து 21 8 2025 அன்று திருநெல்வேலி மாவட்ட விடுதலைச் சிறுத்தை கட்சியின் சார்பில் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் சாத்தான்குளத்தில் அவரது பூத உடலுக்கு வீரவணக்கம் செலுத்து நிகழ்வு நடைபெற்றது, இதில் கட்சியின் சமூக ஊடக மாநிலச் செயலாளர் சஜன்பராஜ், துணைப் பொதுச் செயலாளர் மு. கலைவேந்தன், கட்சியின் மேனாள் மண்டல செயலாளர் சொ.தமிழினியன், மண்டல செயலாளர் முரசு தமிழப்பன், நெல்லை மாவட்ட செயலாளர் எம். சி. சேகர், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறையின் மாநில துணைச் செயலாளர் விமல் வங்காளியார், நெல்லை மண்டல துணைச் செயலாளர் கரிசல் சுரேஷ், தொண்டர் அணியின் மாநில துணைச் செயலாளர் திருமா சுதாகர், முற்போக்கு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் இரகுவரன் மற்றும் பேரை ஒன்றிய செயலாளர் வே. மாதவன் 19 நகர துணை செயலாளர் வி சாமுவேல் பத்தமடை நகர துணை செயலாளர் S. P. N. கான்சா மைமீன், சேரை செயற்குழு உறுப்பினர் சுந்தர், வே.சரவணன் YMC முருகன் மற்றும் கட்சியின் முன்னனி நிர்வாகிகள் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினார்கள்.
விடுதலைச் சிறுத்தை கட்சியின் சார்பில் சாத்தை பாக்யராஜ் அவரது பூத உடலுக்கு வீரவணக்கம்!






