பெற்ற பிள்ளையின் தொடையில் சூடு வைத்து துன்புறுத்திய தாய்,அத்தை கைது!

பெற்ற பிள்ளையின் தொடையில் சூடு வைத்து துன்புறுத்திய தாய்,அத்தை கைது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ம. பொடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி மணிமேகலை இவர்களது பிள்ளை ஜனனி 8 வயதான சிறுமி இவர் தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் சிறுமியின் அப்பா கடந்த ஆண்டு இறந்து விட்டார் தற்பொழுது அந்த சிறுமி அம்மா மணிமேகலை அத்தை அனிதா 30 க/பெ செந்தில் என்பவர் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக அந்த சிறுமையின் அம்மா மற்றும் அத்தை ஆகிய இருவரும் சிறுமையின் இரு தொடை பகுதிகளிலும் சூடு வைத்து அடித்து துன்புறுத்தியுள்ளனர்

மணிமேகலையின் தாய் வள்ளியம்மை ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு நாங்கள் அப்படித்தான் செய்வோம் உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள் என்று கூறியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து இராமநத்தம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது இத் தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார் இருவரையும் கைது செய்துஅவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.