சென்னை: போக்குவரத்துத்துறையில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ரூ.1137.97 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. 2023 ஜூலை முதல் 2024 ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் ஓய்வுபெற்றவர்களுக்கு முதற்கட்டமாக நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தின் எதிரொலியாக நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசுப் போக்குவரத்து கழகங்களில் 2023-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை ஓய்வு பெற்ற அனைவருக்கும் ஓய்வூதிய பலன்கள் கிடைக்க ரூ265.44 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் நேற்று ஆக.18-ந் தேதி மண்டல அலுவலகங்கள் முன்பு காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். 2 ஆண்டுகளில் பணி ஓய்வுபெற்ற 3,500 தொழிலாளர்களுக்கு ஓய்வுக்கால பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடைபெற்றது.






