கர்நாடகா, ஆக 12 கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.
இதன் காரணமாக மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பிவழிகின்றன.
இந்நிலையில், விஜயநகர் மாவட்டத்தில் உள்ள துங்கபத்ரா அணை வேகமாக நிரம்பி வந்தது.
இதனையடுத்து, அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது.இந்நிலையில்
அணை யில் இருந்து உபரிநீர்வெ ளி யேறறபபடும் போது 19 ஆவது மதகு வெள்ளத்தில் அடித்துச்
செல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனால்அணையில்இருந்துகிட்டத்தட்ட
விநாடிக்கு 48 ஆயிரம்கன அடி நீர் வெளியேறிவருகிறது.இதனால் ஆந்திராவில்பாயும்கிருஷ்ணா
நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்உள்ளதால்கரையோர மக்களுக்குஎச்சரிக்கை விடுக்
கப்பட்டுள்ளது. 105டிஎம்சி கொள்ளளவுகொண்ட துங்கபத்ரா அணையில் இருந்து குறைந்தபட்சம் 60 முதல்
65 டிஎம்சி தண்ணீரையாவது திறந்துவிட்டால் தான் அணையின் பாதுகாப்பை உறுதி செய்யமுடியும் அமைச்சர் சிவராஜ் தெரிவித்தார்.






