சென்னை ரிப்பன் மாளிகை முன் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப்பணியாளர்கள் இரவில் கைது!

சென்னை: சென்னை ரிப்பன் மாளிகை முன் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப்பணியாளர்கள் இரவில் கைது செய்யப்பட்டுள்ளனர். பணி நிரந்தரம், தூய்மைப் பணியை தனியார் வசம் ஒப்படைக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் தொடர்ந்து 13-வது நாளாக போராட்டம் நடத்திவருந்தனர்.