தாயுமானவர் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கே சென்று குடிமை பொருள் வழங்கும் திட்டத்தை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்!

சிதம்பரம் அருகே கடவாச்சேரி கிராமத்தில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கே சென்று குடிமை பொருள் வழங்கும் திட்டத்தை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் துவக்கி வைத்து முதியோர்களுக்கு குடிமைப் பொருள் வழங்கினார், அதன் ஒரு பகுதியாக தெற்கு தில்லைநாயகபுரம் கிராமத்தில் சாலை ஓரத்தில் வசித்து வரும் செல்லக்கண்ணு மல்லிகா வயதான தம்பதியினருக்கு பொருள் வழங்கப்பட்டது அப்போது அந்த தம்பதியினர் தங்களுக்கு குழந்தை இல்லை எனவும் நாங்கள் இருவரும் சாலை ஓரத்தில் வசித்து வருவதாகவும் பலமுறை அதிகாரிகளுக்கு பட்டா கேட்டு மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என கோரிக்கை வைத்தனர், இதனைக் கேட்டுக் கொண்ட வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் சிதம்பரம் அருகே உள்ள பெரியப்பட்டு பகுதியில் இந்த தம்பதியினருக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தினார் அதற்கு மாவட்ட ஆட்சியரும் இசைவு தெரிவித்த நிலையில் அமைச்சரின் இந்த நடவடிக்கையால் வயதான தம்பதியினர் நெகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர்கள் சங்கர்.
ராஜேந்திரன். உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.