சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ சோதனை

சென்னை: சிலைக் கடத்­தல் தடுப்­புப் பிரிவு முன்­னாள்ஐஜி­யான பொன்.மாணிக்­கவேல் வீட்­டில்
இன்று (சனிக்­கி­ழமை சிபிஐ அதி­கா­ரி­கள் சோதனை நடத்­தி­னர்.திரு­நெல­வேலிமாவட்­டம் பழ­வூர்
கோயி­லில் கடந்த 2005ம்ஆண்டு 13 ஐம்­பொன்சிலைகள் திரு­டு­போ­யின. இதில் 6 சிலைகள்
விரு­து­ந­கர் மாவட்­டம் ஆலப்­பட்­டி­யில் கடந்த 2008ம் ஆண்டு கண்­டெடுக்­கப்­பட்­டன.

இந்தசிலைகளை மீட்டபோலீ­ஸார், அவற்றை சர்­வதேச கும்­ப­லு­டன் சேர்ந்து வெளி­நா­டு­களில்

கோடிக்­கணக்­கில் விற்க உத­வி­ய­தா­கப்புகார் எழுந்­தது. இந்­நி­லை­யில், இந்த வழக்கு தொடர்­பாக.

அப்­போது சிலை கடத்­தல் தடுப்­புப்பிரிவு ஐஜி­யாக இருந்த பொன்.மாணிக்­கவேல் விசா­ரணை

மேற்கொண்டார்.இந்த வழக்­கில் துணைகாவல் கண்­கா­ணிப்­பா­ளராக இருந்த காதர்பாஷா,
சிறப்பு உதவி காவல்ஆய்­வா­ள­ராக இருந்த சுப்­பு­ராஜ் ஆகி­யோர் கைது செய்­யப்­பட்டு,
பணி­யிடை நீக்­கம் செய்­யப்­பட்­ட­னர். இந்­நி­லையில், திரு­நெல்­வேலி பழ­வூர் சிலை கடத்­தல்
வழக்­கில் தொடர்­பு­டைய தீன­த­யா­ளனதப்­பிக்க வைக்­கவே, அவ­ரு­டன் சேர்ந்துதன்னை பழி­வாங்­கும்
நோக்­கில் தனக்கு எதி­ராக பொன்.மாணிக்­கவேல் பொய் வழக்­குப்பதிவு செய்­தி­ருப்­ப­தா­கவும்,

அவர் மீது சிபி­சி­ஐடி விசா­ர­ணைக்கு உத்­த­ர­விட வேண்­டும்என்று சென்னை உயர் நீதி­மன்­றத்­தில்

காதர் பாஷா வழக்கு தொடர்ந்­தார்.இந்த வழக்கை விசா­ரித்த நீதி­பதி, “பொனமாணிக்­கவேல், காதர்
பாஷாஆகியஇரு­வ­ரும் ஒரு­வர் மீது ஒரு­வர் குற்­றச்­சாட்­டு­களை வைத்­துள்­ள­னர். சிலை கடத்­தல் தொடர்­பான
உண்மை வெளி­வர சிபிஐ விசா­ர­ணை­தான்சரி­யாக இருக்­கும்.எனவே, நீதி­மன்­றத்­தின்தனிப்­பட்ட அதி­கா­ரத்­தைப் பயன்­ப­டுத்திஇந்த வழக்கை சிபிஐவிசா­ரிக்க வேண்­டும்”என்று உத்­த­ர­விட்­டார்.அதன் அடிப்­படையில், டெல்லி சிபிஐ
இந்த வழக்கை விசா­ர­ணைக்கு எடுத்­தது.இதை­ய­டுத்து, காதர்பாஷா, சுப்­பு­ராஜ் ஆகி­யோர் மீது சிலை கடத்லுக்குஉத­வி­ய­தாக வழக்­குப்­ப­திவு செய்­யப்­பட்ட, அந்த முதல் தகவல் அறிக்­கையைப்பயன்­ப­டுத்தி கடந்த
2022ம் ஆண்டு சிபிஐவழக்­குப் பதிவு செய்­தது. இந்­நி­லை­யில், இந்த வழக்கு தொடர்­பாக, சென்னை பாலவாக்­கத்­தில் வசித்துவரும் பொன்.மாணிக்­கவேல் வீட்­டிற்கு இன்றுவந்த 5க்கும் மேற்­பட்டசிபிஐஅதி­கா­ரி­கள்,இந்தவழக்கு தொடர்­பானஆவ­ணங்­கள் ஏதே­னும்இருக்­கி­றதா என்­பதுகுறித்து இன்று காலை முதல் அங்கு சோதனைநடத்­தி­னர். வழக்கு தொட ர்­பாக பொன்.மாணிக்­கவே­லி­ட­மும் சிபிஐ அதி­கா­ரி­கள் விசா­ரணை மேற்கொண்­டுள்­ள­னர்.