திருச்சியில் அன்பில் தொழிலாளர் சங்கம் மற்றும் திருச்சி ஏர்போர்ட் டாக்ஸி ஓட்டுநர்கள் நடத்தும் அன்னதான விழா.
திருச்சி சர்வதேச விமான நிலைய சாலையில் அன்பில் தொழிலாளர் சங்கம் மற்றும் திருச்சி ஏர்போட் டாக்ஸி ஓட்டுநர்கள் இணைந்து அன்னதான விழா நடைபெற்றது. இந்த அன்னதான நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளராக முனைவரும் கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான இனிகோ இருதயராஜ் கலந்துகொண்டு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கி சிறப்பித்தார் மேலும் இந்த நிகழ்வில் அன்பில் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் ஏர்போர்ட் டாக்ஸி ஓட்டுனர் நிர்வாகிகள் 65 ஆவது வார்டு வட்ட செயலாளர் பன்னீர்செல்வம் வட்ட கழக நிர்வாகிகள் பிரதிநிதி கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று அன்னதான விழாவை சிறப்பித்தனர்.






