வயநாடு செல்லும் பிரதமர் மோடி தேசிய பேரிடராக அறிவிப்பார்- ராகுல் காந்தி!

புது­டெல்லி, ஆக.11 கேரள மாநிலம் வயநாடு, சூரல் மலை,
முண்­டக்கை, பூஞ்சிரித்­தோடு, அட்­ட­மலை ஆகிய இடங்­
க­ளில் கடந்த மாதம் 30ம் தேதி அதி­கா­லை­யில் நிலச்­சரிவு
ஏற்­பட்­டது. இதில் 400-க்கும் மேற்­பட்டோர் பலியானார்­கள்.
பலர் மாயமாகி­விட்­டனர். மீட்புபணி இன்னும் நடை
பெற்று வருகிறது. பாதிக்­கப்­பட்ட பகு­தி­க­ளுக்கு நாடாளு­
மன்ற எதிர்க்­கட்சி தலை­வர் ராகுல்­காந்தி, பிரியங்கா
காந்தி, கேரள முதல்மந்­திரி பினராயி விஜயன், மத்­திய மந்­திரி
சுரேஷ் கோபி உள்­பட பலர் சென்று, பாதிக்­கப்­பட்ட மக்களை
சந்­தித்து ஆறு­தல் கூறினர்.
இந்த நிலை­யில் பிரதமர் நரேந்­திர மோடி இன்று வயநாடு
சென்­றுள்­ளார். டெல்லி­யில் இருந்து தனி விமானம் மூலம்
புறப்­பட்ட அவர் காலை 11 மணியளவில் கேரளாவின்
கண்­ணூர் விமான நிலை­யம் சென்­றடைந்­தார். அங்கி­ருந்து
அவர் ஹெலி­காப்­டரில் பறந்­த­படி பாதிக்­கப்­பட்ட பகு­தி­களை
பார்­வை­யிடு­கிறார். அதைத்தொடர்ந்து பிற்­ப­க­லில் அவர்,
பாதிக்­கப்­பட்ட பகு­தி­க­ளுக்கு செல்கிறார்.
அங்கு பிரதமர் மோடிக்கு மீட்புப் பணி­கள் குறித்து மீட்புப் படை
யினர் விளக்கம் அளிப்­பார்­கள்.அங்கு மறு­வாழ்வுப்பணி­கள்
எப்­படி நடக்­கின்­றன? என்­பதை அவர் பார்­வை­யிடுவார்.
நிலச்­சரிவில் சிக்கி மீட்­கப்­பட்­டவர்­கள் தங்கியிருக்­கும்
முகா­முக்­கும், சிகிச்சைபெற்று வரும் மருத்­து­வம­னைக்­கும்
பிரதமர் மோடி சென்று அவர்­க­ளுக்கு ஆறு­தல் கூற உள்­ளார்.
இந்­நிலை­யில் வயநாடு செல்லும் பிரதமர் மோடி வயநாட்­டில்
நிலச்­சரிவு­க­ளால் ஏற்­பட்ட கடு­மையான இயற்கை பேரழிவு­களை
நேரில் பார்­வை­யிட்ட பின்­னர், அதை தேசியபேரி­ட­ராக அறிவிப்­பார்
என்று மக்­களவை எதிர்க்­கட்சி தலை­வரும், காங்கி­ரஸ் எம்.பி.யுமான
ராகுல் காந்தி நம்­பிக்கை தெரிவித்­துள்­ளார்.
இது­தொ­டர்­பாகஅவர் தனது எக்ஸ் வலை­தளத்­தில், “வயநாட் டி ல்
நிலச்­சரிவு­க­ளால் ஏற்பட்ட பாதிப்பு­களை நேரில் பார்­வை­யிடு­வதற்­காக
இன்று வயநாடு செல்லும் பிரதமர் நரேந்­திர மோடிக்கு நன்றி.
இது ஒரு நல்ல முடிவு. பேரழிவின் தீவி­ரத்தை நேரில் பார்­வை­யிட்ட பின்­னர்,
அதை தேசிய பேரி­டராக அறிவிப்­பார் என்று நம்புகி­றேன்” என்று அதில் ராகுல்

காந்தி பதிவிட்டுள்­ளார்.