மதுரையை சோர்ந்த மறைந்த பிரபல கிரைம் நாவல் எழுத்தாள ரின் வாழ்க்கையையும்படைப்பு களையும் வெளியிட, ஒரு பத்திரிகை எழுத்தாளரின் மகன் பிரபாகரனை (வெற்றி) நேர் காணலுக்கு சென்னைக்கு அழைக்கின்றனர். தன் தந்தை யைப் பற்றிச் சொல்ல சென்னை வரும் பிரபாகரன் அங்கு பத்திரி கையாளரும் எழுத்தா ளருமான சுவாதியை (ஷில்பா மஞ்சுநாத்) சந்திக்கிறார்.சுவாதியும் அந்தத் தொடரை எழுதுகிறார். அதே சமயத்தில், அங்கே,சில சந்தர்ப சூழ்நிலைகளால், திருடன் மின்னல் ராஜா(கிங்ஸ்லி) மூலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமையாவின் (தம்பி ராமையா) அறிமுகம் கிடைக்கிறது. போலீஸ் இன்ஸ் பெக்டர் ராமையா பிரபாகரனின் துப்பறியும் திறனால் ஈர்க்கப்பட்டு அவரை பாராட்டுகிறார். இந்நிலை யில், தமிழகத்தின் வெவ் வேறு பகுதியில் மாணவ, மாணவிகள் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள்.இந்த தொடர் கொலைகளின் குற்றவாளியை கண்டுபிடிக்க போலீஸ் இன்ஸ் பெக்டர் ராமையா களம் இறங்கு கிறார். தனக்கு உதவியாக பிராபாகரனை வைத்துக் கொண்டு விசாரணையை தொடங்கு கிறார். தனது தந்தை ஒரு க்ரைம் எழுத்தாளர் என்பதால் தனக்கு இயல்பாகவே இருக்கும் புலனாய் வுத் திறனை பயன்படுத்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமையாவுக்கு உதவிகள் செய்கிறார் இதற்கிடை யே போலீஸ் இன்ஸ் பெக்டர் ராமை யாவின் மகள் எதிர்பாராவிதமாக தற்கொலை செய்து கொள்கிறார். அவள் ஏன் தற்கொலை செய்கி றாள்? பிராபாகரன் இந்த வழக்கின் மர்மங்களை எப்படி அவிழ்க்கிறார்? கொலை காரன் யார்? அவன் ஏன் இந்த கொலைகளை செய்கிறான்? என்பதை விளக்குவதே படத்தின் மீதிக்கதை. நல்ல கதைகளை தேர்ந்தெடுக்கும் வெற்றி இம் முறை சற்று தடுமாறியுள்ளார்.அதே போல அவரது நடிப்பிலும் எந்த மாற்றமும் இல்லை. எப்போதும் போல ஒரே மாதிரியான முகவெளிப்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார். இம்முறை கண்ணை உருட்டும் துப்பறியும் முறைகள் மட்டுமே கடைபிடித்துள் ளார். ஒரே ஆறுதல் அவர் சண்டைக் காட்சிகளில் பிரகாசிக்கிறார். இன்ஸ்பெக்டராக தம்பி ராமையா வுக்கு ஒரு பெரிய கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது.அதை அவர் கோமாளித்தனமான உடல் மொழி யோடு நம்மை வெறுப்படைய செய்துள்ளார். அதே நேரத்தில் தன் மகள் இறந்த பின் அவர் ஒரு அருமை யான குணச்சித்திர நடிகர் என்பதை நிருபித்துள்ளார். நாயகி யாக ஷில்பா மஞ்சுநாத் துக்கு பெரிய அளவில் திரை இருப்பு இல்லை.சைக்கோ – கொலையாளி யாக கட்டுமஸ்தான உடல் கொண்ட மகேஷ் தாஸ் வில்லத்தனத்தில் எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஒரு தேர்ந்த நடிகராக வரவேண்டும் என்றால், அவர் தீவிர நடிப்பு பயிற்சி எடுக்க வேண்டும்.மின்னல் ராஜாவாக ரெடின் கிங்ஸ்லியின் நகைச்சுவை துளியும் எடுபட வில்லை.தொழில் நுட்ப ரீதியாக ஒளிப்பதி வாளர் அரவிந்த், இசைமைப்பாளர் ஏ.ஜே.ஆர் பங்களிப்பு சற்று ஆறுதல் அளிக்கிறது. படத் தொகுப்பாளர் விஷால் தம்பி ராமையா மகளின் தற்கொலை காட்சிக்கு பிறகு வரும் பிளாஷ் பேக்காட்சி களை அப்படி யே தூக்கி இருக்கலாம். இயக்குனர் அனீஷ் அஷ்ரஃப் ஒருவழக்கமான சைக்கோ த்ரில்லர் கதையை எடுத்துக்கொண்டு ஒரு சுவாரஸ்ய மற்ற திரைக்கதையை உருவாக்கி யுள்ளார்,
முதல் பக்கம் சினிமா விமர்சனம்!






