சென்னைஆக.1 – அரசியலில் எனக்கென்றுஒரு சுயமரியாதை இருக்கிறது என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். நேற¢று காலையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அடையாறு பூங்காவில் நடை பயிற்சி செய்த போது,அவரை முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். பின்னர்நேற¢றுதனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம், பா.ஜ.க.கூட்டணியில் இருந்து விலகுவதாகஅறிவித்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்,தி.மு.க.வை வீழ்த்துவது எங்கள் இலக்கல்ல என்று கூறியிருந்தார்.இந்த நிலையில் ஒரேநாளில் 2-வது முறையாக தற்போது முதல்-அமைச்சரை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துள்ளார்.இது தமிழக அரசியலில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்த இந்த சந்திப்பு தற்போது நிறை வடைந்துள்ளது. இந்த நிலையில் முதல்-அமைச்சருடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர் களைச்சந்தித்த ஓ. பன்னீர்செல்வம் கூறியதாவது:-அரசியல் நிமித்தமாக முதல்-அமைச்சரை சந்திக்கவில்லை. அவரது உடல் நலனை விசாரிக்க மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம். அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; எதிரியும் இல்லை. தமிழகத்திற்கு கல்விநிதி தராததால் மத்திய பா.ஜ.க.அரசு மீது எனக்கு வருத்தம் உள்ளது. அரசியலில் எனக்கென்று ஒரு சுயமரியாதை இருக்கிறது. தேர்தலில் ஒன்று சேர்ந்துள்ள பா.ஜ.க. – அ.தி.மு.க.வுக்கு வாழ்த்துக்கள். விஜய்யுடன் நானும் பேசவில்லை; அவரும் என்னுடன் பேச வில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
தேசிய ஜனநாயக கூட்டணி உடனான உறவு முறிந்தது:
பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி
சென்னை:ஆக01 – தேசிய ஜனநாயககூட்டணியில் இருந்துஓ.பி.எஸ் தலைமையிலான அதிமுக உரிமை மீட்புக்குழு வெளியேறுவதாக அறிவித்துள்ளது.சென்னையில் தனது ஆதரவு நிர்வாகி களுடன் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக் கூட்டத்த்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன்; தேசியஜனநாயக கூட்டணி உடனான உறவு முறிந்தது.ஒருமித்த கருத்தாகத்தான் பாஜக கூட்டணியிலிருந்து விலக முடிவு எடுத்துள்ளோம். இனி எப்போதும் தேசியஜனநாயக கூட்டணியில் இடம் பெறமாட்டோம். எந்தக் கட்சியுடனும் தற்போது கூட்டணி இல்லை. கூட்டணியில் இருந்து விலகிய காரணம் அனைவருக்கும் தெரிந்ததுதான். பாஜக எங்களுக்கு என்ன செய்தது என்பதை நாடறியும்;சொல்ல வேண்டிய தில்லை. தமிழ்நாடு முழுவதும் ஓ.பன்னீர்செல்வம் சுற்றுப் பயணம் மேற்கொள்வார்.யாருடன் கூட்டணி என்பது குறித்து ஆராய்ந்து முடிவுசெய்யப்படும்.






