செந்தில் பாலாஜியின் வாழ் நாள் முழுவதும் இந்த வழக்கு விசாரணை முடியாது!

வழக்கை தாமதப்படுத்த தமிழக அரசு முயற்சி செய்கிறது – உச்ச நீதிமன்றம் காட்டம்

டெல்லி ;
ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில் 2011 – 2015 வரை போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி.அந்த சமயத்தில் அரசு வேலை வாங்கித்தருவதாக கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்துவிட்டதாக செந்தில் பாலாஜி மீது சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ள தாக மற்றொரு வழக்கை பதிவு செய்த அமலாக்கத்துறை 2023ஆம் ஆண்டு செந்தில் பாலாஜியை அதிரடியாக கைது செய்தது.கைது செய்யப்பட்ட பிறகு செந்தில் பாலாஜிக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை மேற் கொள்ளப்பட்டு பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 14 மாத சிறை வாசத்திற்குப் பிறகு 2024 செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் ஜாமீன் அளித்ததன் பேரில் சிறை யில் இருந்து வெளியே வந்தார். உடனடியாக மீண்டும் அமைச்சராக வும் பொறுப்பு ஏற்றார். ஆனால்,    உச்சநீதி மன்றம் கெடு விதித்ததன் காரணமாக செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.இந்த வழக்கு சென்னையில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கில் குற்றப் பத்திரிகையுடன் பல துணை குற்றப் பத்திரிகைகள் இணைக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் மார்ச் மாதம் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து பண மோசடி யால் பாதிக்கப்பட்ட ஒய்.பாலாஜி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சூர்யகாந்த், ஜோய் மல்யா பாக்ஸி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், “இந்த வழக்கை தமிழக அரசு முறையாக நடத்த வில்லை.இந்த வழக்கில் 2 ஆயிரத் திற்கும் அதிகமானோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள் ளது.தமிழக அரசு முன்னாள் அமைச்சருடன் கூட்டு சேர்ந்து அவரை காப்பாற்ற முயற்சி செய்கிறது” என்று குற்றம் சாட்டப் பட்டது.வாதங்களைக் கேட்டுக்  கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் சுமார் 2000 – 2500 பேர் வரை குற்றம்சாட்டப்பட்டு உள்ளனர். ஒவ்வொரு வழக்கிலும் 900 பேர், ஆயிரம் பேர் என்று குற்றம்சாட்டப்பட்டால் இந்த வழக்கு எப்போதுதான் முடிவுக்கு வரும் என்று கேள்வி எழுப்பினர். வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 2500 பேரையும் விசாரித்தால், இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் வழக்கு முடிவுக்கு வராது. செந்தில் பாலாஜியின் வாழ் நாள் முழுவதும் இந்த வழக்கு விசாரணை முடியாது என்று காட்ட மாகக் குறிப்பிட்டனர்.மேலும், வேலை வாங்குவதற்கு லஞ்சம்      அளித்ததாகக் கூறப்படும் 2 ஆயிரம் பேரையும் குற்றவாளி களாக சேர்த்து, செந்தில் பாலாஜி மீதான விசாரணையை தாமதப்படுத்த தமிழக அரசு முயற்சி செய்கிறது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.மேலும், செந்தில் பாலாஜியைத் தவிர இவ்வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள இடைத்தரகர் கள் யார்? செந்தில் பாலாஜியின் பரிந்துரையின் பேரில் செயல்பட்ட அரசு அதிகாரிகள் யார் ? தேர்வுக்  குழு உறுப்பினர்கள் யார் என்றெல் லாம் கேள்வி எழுப்பிய நீதிபதி, இதற்கு பதில் அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. செந்தில் பாலா ஜிக்கு எதிரான வழக்குகளை 30/7/25 அன்று பட்டியலிட அறிவுறுத்திய நீதிபதி, வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.