15 மாத குழந்தையை பேருந்து நிலையத்தில் தவிக்கவிட்டு, இன்ஸ்டாகிராம் கள்ளக்காதலனுடன் தப்பியோடிய தாய்!

ஹைதராபாத், ஜூலை.30- ஹைதராபாத்தை அடுத்த நல கொண்டா பகுதியை சேர்ந்தவர் பிரவீனா இவருக்கு திருமணமாகி 15மாதத்தில், அதாவது ஒன்றேகால் வயதில் தனுஷ் என்றஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் பிரவீ னா குழந்தையை பார்த்துக் கொள்ளும் நேரம் போக அவ்வப் போது இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் களை பார்த்து வருவது வழக்கம்.அந்த வகையில் ஒரு முறை ரீல்ஸ் பார்க்கும் போது பிரவீனாவுக்கு அதில் ஒரு இளைஞர் அறிமுகமானார்.இந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துகாதலை வளர்த்துள்ளனர். எனினும் கணவரும்,குழந்தையும் இருப்பதால் தனது கள்ளக் காதலனுடன் முழு நேரத்தையும் செலவிட முடியவில்லை என பிரவீனா தவித்தார்.இதனால் கணவரையும் குழந்தையையும் விட்டுவிட்டு கள்ளக்காதலனுடன் சென்றுவிட முடிவு செய்தார். இதற்காக கணவர் வேலைக்கு செல்லும் நேரம் வரை அவர் காத்திருந்தார்.பிறகு குழந்தையை தூக்கிக் கொண்டு அருகில் உள்ள பஸ் நிலையத் திற்கு வந்தார் பிரவீனா. அப்போது குழந்தைக்கு அங்கு தின்பண்டம் வாங்கிக் கொடுத்த நிலையில் அங்குள்ள நாற்காலியில் குழந்தையை அமர வைத்து விட்டு சென்றார்.பின்னர் அவர் நீண்ட நேரமாக தாய் வராத தால் அச்சமடைந்த குழந்தை
தனுஷ், அழத் தொடங்கினான். பின்னர் அங்கிருந்தவர்கள் குழந்தை தூக்கி வைத்து சமாதானம் செய்ய முயற்சித்தனர். ஆனாலும் குழந்தை அழுது கொண்டே இருந்தான். பாத்ரூமுக்கு சென்றிருக்கலாம் என சிறிது நேரம் காத்திருந்த நிலையில் அங்கிருந்  தோர் தாயை தேடினர். நீண்ட நேரமாகியும் அவர் வராததால் உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அங்கிருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தனர்.அதில் பிரவீனா, யாரோ ஒரு இளைஞரு டன் பைக்கில் அமர்ந்து செல்லும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதையடுத்து பைக்கின் பதிவு எண்ணை வைத்து உரிமையா ளரை போலீஸார் பிடித்த போது, அவர் தனது பைக்கை, நண்பருக்கு கொடுத்திருந்தது தெரிய வந்தது.அதாவது பைக்கை கடனாக வாங்கிக் கொண்டு தனது காதலியை அழைத்துச்செல்ல வந்திருக்கிறார் அந்தஇன்ஸ்டா காதலன்.பின்னர் விசாரணையில் பிரவீனாவையும் அவருடைய
கள்ளக்காதலனையும் போலீஸார் பிடித்தனர். பிறகுகுழந்தையின் தந்தையை வரவழைத்து, குழந்தை யை அவரிடம் ஒப்படைத்தனர். மேலும் பிரவீனாவுக்கும் கள்ளக்   காதலனுக்கும் போலீஸார் அறிவு ரை கூறினர்.இதையடுத்து பிரவீனா கணவர், கள்ளக்காதலன் ஆகிய 3 பேருக்கும் கவுன்சலிங் கொடுக்கப் பட்டு வீட்டிற்கு அனுப்பிவைக்கப்  பட்டிருந்தனர். குழந்தையை விட்டு விட்டு அந்த தாய் சென்றதும் அது தவித்த தவிப்பு, சிசிடிவியில் வெளி யாகி பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது. பால் மனம்மாறாத பச்சை புள்ளையை இப்படியா தவித்து    விட்டு செல்வது என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.