பாஜக, திமுக அரசியல் ஆதாய நாடகத்தை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.இது தொடர்பாக விஜய் வெளியிட் டுள்ள அறிக்கையில், “கங்கை கொண்டான், கடாரம் வென்றான் என்று பெயர் பெற்ற, கடல் கடந்து படை நடத்தி, இலங்கை முதல் இந்தோனேசியா வரை தெற்காசியா முழு வதையும் ஒரு குடையின் கீழ் ஆட்சி புரிந்த ஒப்பற்ற பேரரசன், மாபெரும் வெற்றிச்சரித்திரத்தைத் தன் மார்பினில் தாங்கியவன் சோழப் பேரரசின் வெற்றிப் பேரொளியாகத் திகழ்ந்த ராஜேந்திர சோழன்.ராஜராஜ சோழனின் மகனாகப் பிறந்தாலும் தந்தையை யும் தாண்டி வெற்றித்தடம் பதித்த தமிழ்ப் பேரரசன்,தன் வெற்றியின் அடையாளமாக இருப்பதற்காக அமைத்த நகரம் தான் கங்கை கொண்ட சோழபுரம் ஆயிரம் ஆண்டுகளாகத்தமிழர்களின் பெரு மைக்குரிய அடையாளமாக நிமிர்ந்து நிற்கிற ஒரு நகரம். கங்கை கொண்ட சோழபுரம் கோவில், யுனெஸ் கோவால் உலகப்பாரம் பரியச் சின்னமாக அங்கீகரிக்கப் பட்ட பெருஞ் சிறப்பு கொண்டது. மாபெரும்யானைப்படை, கடற் படையைக் கட்டமைத்திருந்த வீறு மிகுந்த சோழப் பேரரசால் அமைக் கப்பட்டு, இன்றளவும் தமிழ் மண்ணுக்கும் தமிழகத்திற்கும் தனிப் பெரும் அடையாளமாக இருக்கும் கங் கை கொண்ட சோழ புரத்திற்கு,தமிழையும் தமிழ் நாட் டையும் ஓரவஞ்சனையுடன் ஒதுக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் பிரதமர் வந்து, ராஜராஜ சோழனுக் கும் ராஜேந்திரசோழனுக்கும் சிலைகள் அமைக்கப்படும் என்று அறிவித்த தோடு சோழர்களின் பெருமை குறித்து நமக்குப்பாடம் எடுப்பது போலவும் பேசிச் சென் றுள்ளார். 75 ஆண்டுகளைக் கடந்த கட்சி என்றும் தமிழ், தமிழர் அடையாளம் என்றாலே அது தங்களுக்கு மட்டுமே உரியது என்பது போலவும் பொய்யாக மார்தட்டிக்கொள்ளும் தற்போதைய ஆளும் கட்சியான தி.மு.க. , தமிழர் பெருமையான சோழப் பேரரசர் களுக்கு உரிய மரியாதையை முன்பே முழுமையாக அளித்திருந் தால் இப்போது தமிழர்களுக்கு எதிராக இருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு இதைக்கையில் எடுத்திருக் காது. இதை யெல்லாம் செய்யாமல், ஒன்றியப்பிரதமர் வருகை தமிழ் நாட்டுக்குப் பெருமை என்று வாஞ்சையாகச் சொல்லிச்சிலாகித் தது இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு. சோழப்பேரரசின் பெருமையைக்கொண்டாட வேண்டியது தங்கள் கடமை என்பதை மறந்து, ஒன்றிய பா.ஜ.க. கையில் அடைக்கலம் புகுந்து தமிழகத்தை அடகு வைத்தது போலவே இப்போது தமிழர்களின் பெருமையையும்அடகுவைத்துள்ளது தி.மு.க.அரசு. கீழடியில் கிடைத்த அசைக்க முடியாத ஆதாரங்களை மறைத்து,தமிழர் நாகரிகத்தையும் வரலாற்றையும் மூடிமறைக்க முயலும் ஒன்றிய பா.ஜ.க. அரசு, இப்போது இங்கு வந்து சோழர் களின் பெருமை பற்றிப் பேசி உள்ளது, முழுக்க முழுக்கக் கபட நாடக மன்றிவே றென்ன?. ஏற்கெனவே,அரசியலில் கபடநாடகம் போடுவதையே இயல்பாகக் கொண்ட தி.மு.க. , இப் போது ஒன்றிய பா.ஜ.க. அரசின் கபட நாடகத்திற்குத் தாள்பணிந்து வணங்கி, தங்கள் மறைமுக உறவி னருக்கு விசுவாசத்தைக் காட்டி உள்ளது. எதிர் எதிராக இருப்பது போல காட்டிக் கொண்டே ,உள்ளுக்குள் மறை முகமாக இணைந்து ஓர் அரசியல் நாடகத்தினை அரங்கேற்றும் தி.மு.க. வையும் பா.ஜ.க.வையும் ஓரணியில் கபடதாரிகள் என்று தானே அழைக்க வேண்டும்? நாம் இப்படிச்சொல்வது, மறை முகமாக ஓரணியில் இணைந்து இருக்கும் இவ்விரு கபடதாரிகளுக்கும் , மக்களுக்குத் த.வெ.க. உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறதே என்ற வகையில் எரிச்சல் ஏற்படலாம். அதற்கு என்ன செய்ய? உண்மை ஒருநாள் அம்பலமாகத்தா னே செய்யும்.அரசியலில் தன் இரண்டாம் ஆண்டில் பயணிக்கும் தமிழக வெற்றிக்கழகமே, தமிழக வரலாற்றுப் பெருமை களின் மீது பெரும் அக்கறை கொண்ட பேரியக் கம். சேர, சோழ, பாண்டியர்கள் ஆட்சியின் தொன்மப் பெருமை களைப்பறை சாற்றும் பிரமாண்ட மான அருங்காட்சியகம் ஒன்று சென்னை யில் அமைக்கப்பட வேண்டும் என்று சென்ற ஆண்டிலே யே த.வெ.க.தீர்மானம் இயற்றியது. ஆனால், பவள விழாக்கண்ட இந்த தி.மு.க.வோ, பா.ஜ.க.முதுகிற்குப் பின்னால் பதுங்கிக் கொண்டு பம்முகிறது. கொள்கை, காட்பாடு களுடன் அறிஞர் அண்ணா ஆரம்பித்த இயக்கம், இன்று அனைத்திலும் சமரசம் செய்து கொண்டு,தமிழுக்கும் தமிழர்களுக் கும் தமிழ்நாட்டிற்கும் எதிராக உள்ள பா.ஜ.க. விடம் சரணடைந்து கிடப்பது தான் வேடிக்கை. இல்லை இல்லை,இது தான் தி.மு.க. தலை மைக் குடும்பத்தின் வாடிக்கை. மறைமுகமாகப் பா.ஜ.க.வும் தி.மு.க.வும் ஓரணியில் இருக்கும் கபடதாரி களாக இணைந்து நடத்தும் அரசியல் ஆதாய நாடகத்தை இனியும் தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்.இவர்கள் இருவரின் மறைமுகமான கபட நாடக அரசியலுக் கான தக்க பதிலடியை 2026 தேர்தலில் தமிழக மக்கள் உறுதியாகத் தருவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக, திமுக நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள்- விஜய்!






