பிரதமர் மோடியை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சி விமான நிலையத்தில் வரவேற்றார் !

பிரதமர் மோடியை சந்திப்பதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே திருச்சியில் உள்ள தனியார் விடுதியில் தங்கினார். முன்னாள் அமைச்சர்கள் கே.பி.
முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரும் ஈபிஎஸ் உடன் பிரதமரை
சந்திக்க வருகை தந்தனர். இரவு 10 மணிக்கு மேல் விமான நிலையம் வந்திறங்கிய பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி வரவேற்றார். மேலும் பாஜக கூட்டணிக்கட்சித் தலைவர் களான ஜி.கே.வாசன், ஏ.சி.சண்முகம் ஆகியோரும் பிரதமரை வரவேற்றனர்.