தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி…என்னென்ன சிறப்பம்சங்கள்?

தூத்துக்குடி, ஜூலை. 27-பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை
26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு தனி விமானம் மூலம் தூத்துக்குடி வந்தடைந்து, ரூ.452 கோடி செலவில் சர்வதேச தரத்தில் விரிவாக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டடத்தை திறந்து வைத்தார்.

தூத்துக்குடி வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப் பட்டது.விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்ற அமைச்சர் தங்கம் தென்னரசு வள்ளுவர் கோட்டம் போன்ற நினைவு பரிசை வழங்கினார். பிறகு மேடைக்கு வந்த பிரதமர் மோடி விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டடத்தை திறந்து வைத்தார்.இந்த விழாவின் மேடையில் பிரதமர் நநேர்திர மோடி உடன் அமைச்சர் தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், கனிமொழி எம்.பி உள்ளிட்டோர் இருந்தார்கள். சிறப்பம்சங்கள் தூத்துக்குடி நகரிலிருந்து 14 கி.மீ.தொலைவில், வாகைகுளத்தில் அமைந்துள்ள இந்த விமான நிலையம்,சென்னை, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களுடன் இணைக்கப் பட்டு, இரு தனியார் விமான நிறுவனங் கள் மூலம் தினமும் 9 விமான சேவைகளை வழங்குகிறது. பிரதமரின் வருகைக்காக 2,100 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டனர், மேலும் இந்த நிகழ்வு தமிழகத்தின் உட்கட்ட மைப்பு வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல் கல்லாக அமைந்தது. தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையம், 17,340 சதுர மீட்டர் பரப்பளவில், ஆண்டுக்கு 20 லட்சம் பயணிகளையும், ஒரு மணி நேரத்திற்கு 1,440 பயணிகளையும் கையாளும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த முனையத்தில் 4 நுழைவு வாயில்கள், 3 ஏரேர பிரிட்ஜ்கள், 21 செக்-இன் கவுன்ட்டர்கள், 2 கன்வேயர் பெல்ட்கள், 644 இருக்கைகள், மற்றும் 2 விஐபி ஒய்வு அறைகள் உள்ளன. விமான நிலையத்தின் ஓடுபாதை, முன்பு 1,350 மீட்டர் நீளமாக இருந்தது, தற்போது3,115 மீட்டர்நீளத்திற்கும், 45 மீட்டர் அகலத்திற்கும் விரிவாக் கப்பட்டு,ஏ-321 ரக ஏர்பஸ் போன்ற பெரிய விமானங்களை இயக்கும் திறனைப்பெற்றுள்ளது. இந்த விரிவாக்கத்தின் மூலம், ஒரே நேரத்தில் 5 விமானங்களை நிறுத்தும் வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது. மேலும், தூத்துக்குடி-திருநெல்வேலி தேசியநெடுஞ்சாலை யுடன் இணைக்க, 1 கி.மீ.நீளமுள்ள இணைப்பு சாலையும், 500 பயணி வாகனங்களுக்கான பார்க்கிங் வசதியும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய வசதிகள், தென்தமிழகத் தின் விமானப் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதோடு, தூத்துக்குடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுலாவைஊக்குவிக்கும். பிரதமர் மோடி, இந்தத் திறப்பு விழா வில்,வி.ஓ.சிதம்பரனார்துறைமுகத்தில் வடக்கு கார்கோ பெர்த் III திட்டத்திற்கும்அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்வு, தமிழகத்திற்கு மத்திய அரசின் உறுதிப்பாட்டை வெளிப் படுத்துவதாகஅமைந்தது. மேலும், பிரதமர், மறுநாள்(ஜூலை 27) கங்கைகொண்ட சோழபுரம் சென்று, ராஜேந்திரசோழனின் ஆயிரமாவது ஆண்டு விழாவில் பங்கேற்க உள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தின் இந்த மேம்பாடு,தென் மாவட்டங்களுக்கு முக்கியமான உட்கட்டமைப்பு முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. இந்த விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய மற்றும மாநில அமைச்சர் கள், உள்ளூர் பிரமுகர்கள் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.பிரதமர் தங்கும் ஓட்டலுக்கு 6 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எல்பிஜி அதிகாரிகள், எல்.பி.ஜி.பாதுகாப்பு அதிகாரிகள்,மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், தமிழக காவல்துறையினர், வெடிகுண்டு கண்டறியும் நிபுணர் குழுவினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட் டுள்ளார்கள்.மேலும் மத்திய மாநில அரசுகளின் உளவுத்துறை அதிகாரி களும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள் அதே போன்று முதலில் பிரதமர் மோடி டி.வி.எஸ்.டோல்கேட் பகுதியில் உள்ள சுற்றுலா மாளிகையில் தங்குவதாக இருந்தது. அதுவும் பாதுகாப்பு காரணங்களால் கடைசி நேரத்தில் நேற்று கலெக்டர் அலுவலகம் அருகாமையில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு மாற்றப் பட்டது. பிரதமர் வருகையை முன்னிட்டு திருச்சி மாநகர் மற்றும் அரியலூர் கங்கைகொண்ட சோழ புரம் பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.தூத்துக்குடிக்கு வந்த பிரதமர் மோடியை,விமான நிலை யத்தில் ஆளுனர் ஆர் என் ரவி வரவேற்றார். விழாவில் மத்திய மந்திரிகள் எல் முருகன், ராம் மோகன்நாயுடு , மற்றும் தமிழக அமைச்சர்கள் கீதாஜீவன், தங்கம் தென்னரசு, கனிமொழி எம்.பி. மற்றும் பாஜக மாநில தலைவர் நயினார்நாகேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.மத்திய மந்திரி ராம்மோகன் நாயுடு, தொடக்கத்தில் சில நிமிடங்கள் தமிழில் பேசினார்.